நாளை இந்த 3 பொருட்களையும் நெருப்பில் போட்டு எரித்தால் போதும். உங்களை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கஷ்டம், பீடை, தரித்திரம், திருஷ்டி அத்தனையும் நெருப்புடன் பஸ்பமாகிவிடும்.

- Advertisement -

திருஷ்டி இருக்கோ இல்லையோ, உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வருகிறதோ இல்லையோ, ஆனால் கட்டாயமாக உங்களை சுற்றி இருக்கும் ஆரா வட்டத்தை கட்டாயமாக வாரத்தில் ஒருநாள் உங்களுக்கு நீங்களே சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று உங்களுக்கு நீங்களே திருஷ்டி கழித்து கொள்வது மிக மிக நல்லது. உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் திருஷ்டி கழித்து விடுங்கள். உங்களுடைய வீட்டிற்கும் திருஷ்டி கழிப்பது மிக மிக அவசியமான ஒரு விஷயம். ஆக உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கும், முறையாக திருஷ்டி கழிக்க கூடிய ஒரு சக்திவாய்ந்த முறையை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

dry-chilli-milagai

ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்தவுடன் 3 வரமிளகாய், 1 ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் மிளகு, இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு திறந்தபடி உங்களுடைய வரவேற்பறையில் வைத்து விடுங்கள். ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும், இரவு வரை அந்த பொருட்கள் அப்படியே திறந்தபடி வரவேற்பறையில் இருக்கட்டும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் அந்த பொருட்களை எல்லாம் எடுத்து நிலை வாசலுக்கு வெளியே ஒரு சிறிய கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் இந்த 3 பொருட்களையும் போட்டு விடுங்கள். உங்கள் வீட்டை பிடித்த பீடை தரித்திரம் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் அனைத்தும் அந்த நெருப்போடு பொசுங்கிப் போய்விடும்.

valamburikai

வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி கழிக்க வீட்டில் இருப்பவர்களின் ஆரா வட்டத்தை ஒளிவட்டம் ஆக மாற்ற, வீட்டில் இருப்பவர்கள் எப்போதும் எதிர்மறை ஆற்றலுக்கும், கண் திருஷ்டிக்கும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, நமக்கு திருஷ்டி கழிப்பதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படும் ஒரு பொருள் வலம்புரிக் காய்.

- Advertisement -

இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வலம்புரிக்காய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதிலிருந்து வாரம் ஒவ்வொரு காயாக எடுத்து திருஷ்டி கழிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமரச் செய்யுங்கள். குடும்பத் தலைவியின் உள்ளங்கைகளில் கைகளில் 3 வரமிளகாய், 1 ஸ்பூன் கடுகு, 1 வலம்புரிக்காய் இந்த மூன்று பொருட்களையும் வைத்துக்கொண்டு, யாருக்கு திருஷ்டி கழிக்க போகிறீர்களோ அவர்களை வலப்புறமாக மட்டும் 3 முறை சுற்றி கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களுடைய தலையை 3 முறை சுற்றி கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த பொருட்களை கொண்டு போய் நெருப்பில் போட்டு விட வேண்டும்.

neruppu

ஏற்கனவே வெளியில் வீட்டில் இருக்கும் திருஷ்டியை போக்க கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி வைத்து இருக்கிறீர்கள் அல்லவா, அதே நெருப்பில் கொண்டுபோய் இந்த பொருட்களையும் போட்டு பொசுக்கி விடுங்கள். திருஷ்டி என்பது ஒரு முறை கழித்து விட்டால், அதன் பின்பு நம்மிடம், திருஷ்டி மீண்டும் வராமல் இருக்காது.

indian-family

அனுதினமும் நாம் செய்யக்கூடிய வேலையின் மூலம், நம்மை பார்ப்பவர்களுடைய கண்களின் மூலம் திருஷ்டி நம்மேல் பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. வாரம் ஒருமுறை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து கொண்டால் உங்கள் வீடும், நீங்களும் கண் திருஷ்டியில் இருந்தும் எதிர்மறை ஆற்றலிருந்தும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -