நிறைய பேருக்கு சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். சில பேருக்கு சொந்தமாக நிலம் இருக்கும். ஆனால் அந்த நிலம் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகளில் சிக்கி இருக்கும். ஒரே நிலத்தை இரண்டு பேர் வாங்கி விட்டார்கள் என்ற பிரச்சனை கூட சில பேர் சந்தித்திருப்பீர்கள். இப்படி நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீருவதற்கு செய்ய வேண்டிய எளிமையான சிவன் வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சிவன் வழிபாடு
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர இதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நட்சத்திரம் 3. இந்த மூன்று நாட்கள் வரக்கூடிய நட்சத்திரத்தை முதலில் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கார்த்திகை, மிருகசீரிஷம், பூசம். இந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளில் சிவனை வழிபாடு செய்ய வேண்டும். எப்படி என்றால் சிவனுக்கு இந்த தண்ணீரை கொண்டு உங்கள் கைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் ருத்ராட்சங்களை போட்டு கொள்ளவும். இந்த ருத்ராட்ச தண்ணீரை சிவபெருமான் தலைமேல் ஊற்றி உங்கள் கையாலேயே அபிஷேகம் செய்து நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால் சீக்கிரம் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். அது புதுசாக நிலம் வாங்க வேண்டும் என்றாலும் சரி, அல்லது வாங்கிய நிலத்தில் இருக்கும் பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்றாலும், சொத்தின் மீது இருக்கும் கோர்ட் கேஸ் வழக்குகள் கூட சரியாகும்.
சில இடங்களில் எல்லாம் ஒரு சொத்துக்கு நான்கு பேர் பிரச்சினை செய்வார்கள். அதில் மூன்று பேர் ஒத்துப்போவார்கள். ஒருவர் மட்டும் கையெழுத்து இட மாட்டேன் என்று பிரச்சனை வரும். பிரச்சனை செய்யும் அந்த நபரை சரி கட்ட வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: கசப்பான கஷ்டத்தை போக்கும் பிள்ளையார் வழிபாடு
அவருடைய மனது மாறி, அவருடைய கையெழுத்து கிடைத்து சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டை செய்யுங்கள். ஆனால் கட்டாயமாக இந்த வழிபாட்டை மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நட்சத்திர நாளில் செய்யும்போது மட்டும் தான் முழு பலனை பெற முடியும். வீட்டில் உங்கள் வசதிக்கு ஏற்ப சின்னதாக சிவலிங்கத்தை வாங்கி வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.