எப்பாடுபட்டாவது உங்களுடைய வாழ்க்கையில் இந்த ஒரு தானத்தை செய்து விடுங்கள். முன்னோர்கள் செய்த பாவமும் தீர்ந்துவிடும். உங்களுடைய அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும்.

mangalyam
- Advertisement -

நாம் செய்த பாவ கணக்குகளை கழிக்கவும், நம் முன்னோர்கள் செய்த பாவ கணக்குகளுக்கான பிராயச்சித்தத்தை தேடுவதற்கும், சாஸ்திர ரீதியாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரே பரிகாரம் தானம் செய்வது தான். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்கிறீர்கள். கஷ்டத்தோடு கஷ்டமாக இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு, உங்களுடைய கையால் இந்த ஒரு தானத்தை மட்டும் இந்த நாளில் செய்து விடுங்கள் போதும். உங்களை பிடித்துக் கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் விடிவு காலம் பிறந்து விடும். இந்த தானம் செய்வது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருப்பினும் நம் வாழ்க்கையை வாழும் அளவிற்கு அவ்வளவு பெரிய கஷ்டம் அல்ல.

Hindu Marriage

பொதுவாகவே நாம் பிறந்த நட்சத்திரத்தன்று செய்யக்கூடிய தானம் நமக்கு பல பலன்களை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று தங்கத்தை தானமாக கொடுக்க வேண்டும். தங்கம் விற்கும் விலைக்கு தங்கத்தை தானமாக கொடுப்பதா? செய்த பாவ புண்ணிய கணக்குகளை சரி செய்து, கர்ம வினைகள் குறைய வேண்டும் என்றால், இதை மட்டும் நீங்கள் செய்து பாருங்கள். ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வாழ்க்கையில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும்.

- Advertisement -

உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தன்று யாராவது ஏழை பெண்ணுக்கு தாலி தானமாக கொடுக்க வேண்டும். தங்கத்தில் தாலி குண்டினை தானமாக கொடுக்கும் பட்சத்தில், அது உங்களுடைய பரம்பரைக்கே பல நன்மைகளை தேடித் தரும். நிறைய பேரின் குடும்பங்களில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு தாலியை தங்கத்தில் வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். தங்கத்தில் தாலி வாங்க முடியாததால் அந்த வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.

dhanam

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திற்கு அந்த கன்னிப் பெண்ணுக்கு தாலியை தானம் கொடுப்பதன் மூலம் உங்களுடைய கர்ம வினைகள் அனைத்தும் கழிக்கப்படும். குறிப்பாக இதை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று செய்யுங்கள். பிறந்த நட்சத்திரத்தன்று கடைக்கு சென்று தங்கத்தை வாங்க கூடாது. முந்தைய நாள் அல்லது முன்கூட்டியே வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொண்டு கூட, அந்த தங்கத்தினை பிறந்த நட்சத்திர தினத்தன்று தானம் கொடுப்பது, உங்களுக்கு மிகமிக நல்ல பலன்களை கொடுக்கும். உங்களது பரம்பரைக்கே நன்மையை சேர்க்கக் கூடியது இந்த தானம்.

- Advertisement -

சரி, எங்களுக்கு பிறந்த நட்சத்திரம் எல்லாம் தெரியாது. நாங்கள் என்ன செய்வது. உங்களுக்கு பிறந்த நாள் தெரிந்தால் அந்த நாளில் தானம் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் சனிக்கிழமை, வியாழக்கிழமைகளில் இந்த தங்கத்தை நீங்கள் தானம் கொடுப்பது சிறப்பானதாக இருக்கும். வசதி படைத்தவர்களாக இருந்தால் இந்த தானத்தை வருடம்தோறும் வரும் பிறந்த நட்சத்திரத்தன்று செய்வது நல்லது. முடியாதவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த தானத்தை செய்துவிடுங்கள்.

Thali Mangalyam

நிறைய பேர் வீடுகளில் பணம் காசு இருந்தும் நிம்மதி இல்லாமல் உடல் நிலை சரியில்லாமல், வீட்டில் இருக்கும் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் இல்லாமல் பல கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகள் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த தானத்தை மட்டும் செய்து பாருங்கள். (கோடீஸ்வரர்கள் லட்சாதிபதிகள் தான் இந்த தானத்தை செய்ய வேண்டும் என்று கிடையாது. நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள், கஷ்டப்பட்டு கொண்டிருப்பினும், இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த தானத்தை செய்துவிடுங்கள்.) நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -