இந்த ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு, இன்று மாலை திருக்கார்த்திகை தீபத்தை ஏற்ற தொடங்குங்கள். நீங்கள் எதை நினைத்து தீபம் ஏற்றுகிறீர்களோ அதை அந்த அண்ணாமலையார் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.

deepam
- Advertisement -

இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள். சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கும், உரிய நாளாக இந்த நாள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த திருக்கார்த்திகை தீபத்தில் அந்த அண்ணாமலையாரின் பெயரை உச்சரித்தாலே நிச்சயம் நமக்கு மோட்சம் கிட்டும். திருக்கார்த்திகை தீப திருநாளை நம்முடைய வீட்டில் எளிமையான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இன்று விரதம் இருக்க வேண்டியவர்கள் காலையிலேயே விரதத்தை தொடங்கி தொடங்கி இருப்பீர்கள். இன்று மாலை 5 மணிக்கு முன்பாகவே பூஜைக்கு தேவையான வேலைகளை முடித்து விட வேண்டும். இன்று அண்ணாமலையானுக்கு நிவேதியமாக அப்பம், பொரி உருண்டை தயார் செய்வது, மண் அகல் விளக்குகளுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, எண்ணெய் ஊற்றி திரி போட்டு, தயார் செய்வது பூஜை அறையை அலங்காரம் செய்வது, போன்ற எல்லா வேலைகளையும் ஐந்து மணிக்கு முன்பாகவே முடித்து விட வேண்டும்.

- Advertisement -

திருக்கார்த்திகை தீபமான இன்றைய தினத்தில் கட்டாயமாக எல்லோரும் 27 மண் அகல் விளக்குகளை வீட்டில் ஏற்றுவது சிறப்பு. அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் இன்று மாலை சரியாக 6:00 மணிக்கு ஏற்றப்படும். அந்த தரிசனம் நேரலையாக நம் வீட்டிலேயே தொலைக்காட்சியின் வழியாக பார்க்கக்கூடிய பாக்கியத்தை அந்த இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்றான். அதை தவறாமல் பார்த்துவிட்டு அண்ணாமலையார் தீபத்தை தரிசனம் செய்துவிட்டு, அண்ணாமலையார் கோவில் மலையில் தீபம் ஏற்றிய பின்பு நம்முடைய வீட்டில் தீபங்கள் ஏற்றப்பட வேண்டும்.

தீப தரிசனத்தை தொலைக்காட்சியில் தரிசனம் செய்து விட்டு, முதலில் வாசலுக்கு சென்று வாசலில் இருந்து தீபங்களை ஏற்றி வர வேண்டும். வாசலில் தீபம் ஏற்றும் போது ‘அண்ணாமலையானே போற்றி போற்றி’ ‘ஓம் நமசிவாய’ இந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு தீபத்தை ஏற்ற தொடங்குங்கள். தீபத்தை ஏற்றி முடிக்கும் வரை மனதில் இந்த நாமங்களை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். வாசலில் இருந்து தீபம் ஏற்றப்பட வேண்டும் பிறகு, வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு தான் பூஜை அறையில் தீபம் ஏற்றப்பட வேண்டும்.

- Advertisement -

இன்றைய தினம் வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்றலாம். படுக்கையறை, சமையலறை, குளியலறை, தொழுவம், தண்ணீர் தொட்டி, மொட்டை மாடி, என்று ஒரு இடம் விடாமல் இன்றைய தினம் உங்களுடைய வீட்டை தீப ஒளியால் அலங்காரம் செய்து முடித்து விடுங்கள்.

அதன்பின்பு பூஜை அறையில் ஒரு சிறிய மண் அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி திரி போட்டு அதில் தீபம் ஏற்றப்பட வேண்டும். வழக்கமாக உங்களுடைய வீட்டில் இதோடு காமாட்சியம்மன் விளக்கு குத்துவிளக்கு ஏற்றக்கூடிய வழக்கம் இருக்கும் அல்லவா அதையும் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக இறைவனுக்கு செய்து வைத்த நிவேதியங்களை வாழை இலையில் வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த நிவேதனங்களை சாப்பிட்டு விரதம் இருப்பவர்கள் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். மனநிறைவோடு இன்றைய வழிபாட்டினை நாம் நிறைவு செய்யும்போது, நம்மை அறியாமலேயே நமக்கு மனதில் ஒரு திருப்தி ஏற்படும். இந்த தீப வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் மேன்மேலும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியை கொடுக்கும் என்பது நம்பிக்கை. அனைவருக்கும் அந்த அண்ணாமலையாரின் ஆசீர்வாதங்கள் கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -