திருமாலின் அற்புத நடனம் வீடியோ

Thirumal nadanam

வீடியோ கீழே உள்ளது:
சயன கோலத்தில் இருந்து தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஒரே தெய்வம் திருமால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. முல்லை நிலத்தில் வசித்த பழங்கால தமிழர்களின் தெய்வமாக இவர் அறியப்படுகிறார். பெருமாள், திருமால், கேசவன், விஷ்ணு, மாதவன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. இப்படி பல சிறப்புகள் மிக்க திருமாலை போல வேடம் அணிந்து பிள்ளைகள் ஆடும் அழகிய நடனம் இதோ.

திருமாலின் புகழ் பற்றி கூற இந்த ஆயுள் போதாது என்ற அளவிற்கு அவரின் புகழ் விண்ணை தாண்டி நிற்கிறது. தன் பக்தர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். உடனே தன் பக்தரை காக்க புறப்பட்டு வரும் தெய்வம் அவர். பிரகலநாதன் வரலாற்றை புரட்டி பார்த்தோமானால் இந்த உண்மை நமக்கு புலப்படும். தன் பக்தனான பிரகலநாதனை காக்க தூணை பிளந்து நரசிம்ம அவதாரம் எடுத்த அற்புத தெய்வம் அவர். அவரை போன்ற வேடம் தரித்த இந்த பிள்ளைகள் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள் என்றே கூற வேண்டும்.