நீங்க கல்யாணம் பண்ணிக்க போறவங்க கிட்ட இந்த 5 குணங்கள் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாருமே இருக்க முடியாது தெரியுமா?

- Advertisement -

திருமணம் என்பது இரு மனம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல, இரு வீட்டார் உடைய மகிழ்ச்சியும் இதில் நிறைந்து இருக்கிறது. கடைசி வரை சுக துக்கங்களை ஒன்றாக பகிர்ந்து கொள்ள போகும் இந்த ஒரு நபரை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. நீங்க திருமணம் செஞ்சுக்க போறவங்க கிட்ட இந்த குணங்கள் எல்லாம் இருக்கான்னு பாருங்க, அப்படி இருந்தா உங்களை விட அதிர்ஷ்டசாலி யாருமே இருக்க முடியாது. அது என்னன்னு? தெரிஞ்சுக்க, தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

திருமணம் செஞ்சு கிட்ட ரெண்டு பேர் அவங்களுக்குள்ள சண்டை போட்டுக் கிட்டாலும் அது அவங்களை மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தையும் சேர்த்து தான் பாதிக்கிறது என்பதை முதலில் தெரிஞ்சுக்கணும். இருவரில் ஒருவராவது பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது என்றால் அதை சமாளிக்க எப்படி எல்லாம் அவர் பொறுமையுடன் இருந்து வழி காட்டுகிறார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த குணம் அதிகம் இருந்தால் எவ்வளவு பெரிய சவால்களை கூட, நீங்கள் ஈசியா சமாளித்து விடலாம்.

- Advertisement -

எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தாலே போதும், நாம் கண்ணியத்துடனும், நேர்மையுடனும் இருக்க கொஞ்சமாவது முயற்சி செய்வோம். இவர்கள் தங்களுடைய குடும்பத்திற்காக நிறையவே விட்டுக் கொடுத்து செல்வார்கள். எனவே கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். இவர்களுக்கு எதையாவது புரிய வைக்க வேண்டும் என்றால் சுலபமாக புரிய வைத்தும் விடலாம்.

சிலர் திருமண பொருத்தத்தை விட, மன பொருத்தத்தை விட, முகப் பொருத்தத்தை பார்ப்பது உண்டு. அழகு என்பது நிரந்தரமான ஒரு விஷயம் அல்ல! அது காலப்போக்கில் மாறக்கூடியது எனவே உங்களுடைய மனதை பார்ப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மனதை பார்ப்பவர்கள் எந்த பிரச்சனைகளையும் ஆழமாக சிந்தித்து எதிர்கொள்வார்கள். சட்டு சட்டுனு முடிவெடுத்து அவசரப்பட்டு குட்டையை குழப்ப மாட்டார்கள்.

- Advertisement -

நாம் நம்மை மட்டுமே அவர்களுடன் இணைத்து கொண்டு வாழ்க்கையை நடத்தப் போவதில்லை. நம்முடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் அவர்களுடன் ஒன்றாக இருப்பது கட்டாயமாகிறது எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் பரஸ்பரம் மரியாதை தெரிந்தவராக இருக்க வேண்டும். சிலர் நீ என்னடா பெரிய இவனா? எனக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற ஆணவத்துடன் இருப்பார்கள். இவர்களை தயவு செய்து புறக்கணித்து விடுங்கள். எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர்கள் தான் நம்முடைய பெற்றோர்களையும், உறவினர்களையும் அனுசரித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.

எல்லோருக்குமே கோபம் என்கிற ஒரு குணம் கட்டாயம் இருக்கும். அப்படி இருந்தால் தான் நாம் மனிதன்! ஆனால் அந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துகிறோம்? என்பதையும் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். கோபத்தினால் உதிர்க்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியம். எவ்வளவு கோபப்பட்டாலும் அதை தவறு என்று உணரக்கூடியவராக இருந்தால் பரவாயில்லை, கோபப்பட்டு விட்டேன் இப்போது என்ன வந்துவிட்டது? போனால் போகட்டும் என்று அலட்சியம் செய்பவர்களை உதறி தள்ளி விடுங்கள். கோபம் நம்மை மட்டும் அல்ல நம்மை சுற்றி இருப்பவர்களையும் அழிக்கும். எனவே கோபப்பட்டாலும் அதை கட்டுப்படுத்துபவர்களும், திருத்தி கொள்பவர்களுமே நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

நமக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் அவர்களிடம் நாம் உரையாடிய பேச்சு தான் எனவே ஒருவர் நம்மிடம் பேசும் முறை எப்படிப்பட்டது? அவர்கள் மற்றவர்களிடம் எப்படி பேசுவார்கள்? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் அநாகரீகம் ஏதாவது தெரிந்தால் அவர்களை தூக்கி எறிந்து விடுங்கள். பேச்சில் நாகரீகமும், இனிமையும் கொண்டவர்களை விட்டு விடாதீர்கள்.

- Advertisement -