ஜாதக பொருத்தம் அட்டவணை | Jathagam porutham attavanai Tamil

Jathagam porutham attavanai Tamil
- Advertisement -

திருமண பொருத்தம் அட்டவணை | Thirumana porutham attavanai

ஜோதிட சாஸ்திரம் என்பது மிகவும் பழமையான அதேநேரம் அனைவருமே, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு வகை வானியல் கணக்கீடு ஆகும். நம் வாழ்வில் முக்கியமான விடயங்களுக்கு ஜோதிட சாஸ்திர ரீதியான பலன்களை தெரிந்து கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. குறிப்பாக கூட்டத்தில் எவருக்கேனும் திருமணம் செய்கின்ற பொழுது ஜோதிட சாஸ்திரத்தை பின்பற்றுவதை யாரும் தவிர்ப்பதில்லை அந்தவகையில் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகின்ற ஜாதகம் பொருத்தம் குறித்து பல வகையான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக எந்த ஒரு வீட்டில் திருமண பேச்சை தொடங்கினாலும், திருமணம் செய்து கொள்ள போகும் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் ஜாதகங்களிலும் 10 பொருத்தங்கள் உள்ளதா? என்று பேசுவதை கேட்டிருப்போம். திருமணம் பொருத்தம் பார்க்கும் பொழுது ஜோதிடர்கள் மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரின் ஜாதகங்களில் பத்து பொருத்தம் சரியாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து மணமக்களுக்கு பொருத்தம் உள்ளதா? இல்லையா? என்பதை தெளிவாகக் கூறுவார்கள்.

- Advertisement -

Jathagam porutham attavanai

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை

வ.எண்பெண் நட்சத்திரத்திற்குபொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்பொருத்தம்
1அஸ்வனிபரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்உத்தமம்
2பரணிபுனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனிஉத்தமம்
3கார்த்திகை 1 ம் பாதம்சதயம்உத்தமம்
4கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்சதயம்உத்தமம்
5ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணிஉத்தமம்
6மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணிஉத்தமம்
7மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணிஉத்தமம்
8திருவாதிரைபூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
9புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
10புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்உத்தமம்
11பூசம்ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்உத்தமம்
12ஆயில்யம்சித்திரை, அவிட்டம் 1, 2உத்தமம்
13மகம்சதயம்உத்தமம்
14பூரம்உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனிஉத்தமம்
15உத்திரம் 1 ம் பாதம்சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்உத்தமம்
16உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்உத்தமம்
17அஸ்தம்பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4உத்தமம்
18சித்திரை 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 2, 3, 4, மகம்உத்தமம்
19சித்திரை 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை 1, மகம்உத்தமம்
20சுவாதிபூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்உத்தமம்
21விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4உத்தமம்
22விசாகம் 4 ம் பாதம்அவிட்டம், சதயம், சித்திரைஉத்தமம்
23அனுஷம்கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதிஉத்தமம்
24கேட்டைகார்த்திகை 2, 3, 4உத்தமம்
25மூலம்உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்உத்தமம்
26பூராடம்பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதிஉத்தமம்
27உத்திராடம் 1 ம் பாதம்உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதிஉத்தமம்
28உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்உத்தமம்
29திருவோணம்அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்உத்தமம்
30அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 1, மூலம்உத்தமம்
31அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை, சதயம், மகம், மூலம்உத்தமம்
32சதயம்சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4உத்தமம்
33பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்உத்தமம்
34பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்உத்தமம்
35உத்திரட்டாதிரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதிஉத்தமம்
36ரேவதிமிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதிஉத்தமம்

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை

வ.எண்ஆண் நட்சத்திரத்திற்குபொருத்தமான பெண் நட்சத்திரங்கள்பொருத்தம்
1அஸ்வனிபரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்உத்தமம்
2பரணிரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனிஉத்தமம்
3கார்த்திகை 1 ம் பாதம்சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2உத்தமம்
4கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4உத்தமம்
5ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதிஉத்தமம்
6மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணிஉத்தமம்
7மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதிஉத்தமம்
8திருவாதிரைபூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
9புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதிஉத்தமம்
10புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், அனுஷம், பரணி, ரோகிணிஉத்தமம்
11பூசம்உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4உத்தமம்
12ஆயில்யம்அஸ்தம், அனுஷம், பூசம்உத்தமம்
13மகம்சித்திரை, அவிட்டம் 3, 4உத்தமம்
14பூரம்உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்உத்தமம்
15உத்திரம் 1 ம் பாதம்பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்உத்தமம்
16உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்பூராடம், திருவோணம், ரேவதிஉத்தமம்
17அஸ்தம்உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
18சித்திரை 1, 2 ம் பாதங்கள்விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்உத்தமம்
19சித்திரை 3, 4 ம் பாதங்கள்விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்உத்தமம்
20சுவாதிஅனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்உத்தமம்
21விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்சதயம், ஆயில்யம்உத்தமம்
22விசாகம் 4 ம் பாதம்சதயம்உத்தமம்
23அனுஷம்உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்உத்தமம்
24கேட்டைதிருவோணம், அனுஷம்உத்தமம்
25மூலம்அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
26பூராடம்உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்உத்தமம்
27உத்திராடம் 1 ம் பாதம்பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்உத்தமம்
28உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்பரணி, மிருகசீரிஷம் 1, 2உத்தமம்
29திருவோணம்உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்உத்தமம்
30அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்உத்தமம்
31அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4உத்தமம்
32சதயம்கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4உத்தமம்
33பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்உத்தமம்
34பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்உத்தமம்
35உத்திரட்டாதிரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4உத்தமம்
36ரேவதிபரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதிஉத்தமம்

இதையும் படிக்கலாமே: திருமண பொருத்தம் பார்க்க

அக்காலத்தில் திருமணம் செய்யும்பொழுது மணமக்கள் இருவரின் ஜாதகத்தில் இந்த பத்து பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்விப்பார்கள். இதனால் அந்த காலத்தில் பெரியோர்களால் நாள், நட்சத்திரம் பார்த்து நிர்ணயிக்கப்பட்ட திருமணம் செய்த பெரும்பாலான தம்பதிகள் பிறந்து வாழ்தல், மன முறிவு போன்ற நிலை ஏற்படாமல் நிறைவாக வாழ்ந்தனர். ஆனால் தற்காலத்தில் மணமக்களின் ஜாதகங்களில் பத்து பொருத்தங்களில் 8 அல்லது 7 பொருத்தங்கள் இருந்தாலே அவர்களுக்கு திருமணம் செய்ய கூடிய நிலை இருக்கின்றது. இதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. அது குறித்து நாம் இப்போது ஆராய வேண்டாம்.

- Advertisement -

எனினும் இப்படி 10 பொருத்தங்களில் 8 அல்லது 7 பொருத்தங்கள் சரியாக இருந்து திருமணம் செய்த பல தம்பதிகளின் வாழ்வில் பிரச்சனைகளும், சிக்கல்களும் ஏற்பட்டதை தங்களின் அனுபவத்தில் கண்டதாக பல ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போது நாம் திருமணம் செய்ய இருக்கின்ற மணமக்கள் இருவரின் ஜாதகங்களில் பார்க்க வேண்டிய பத்து வகையான பொருத்தங்கள் என்னென்ன என்பதை குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தினப்பொருத்தம்

இந்த தினப்பொருத்தம் என்பது திருமணம் செய்யப் போகின்ற ஆண் மற்றும் பெண் ஜாதகங்களில் இருக்கின்ற நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகின்ற சதவீதத்தை குறித்தும், திருமணம் செய்ய உள்ள ஆண், பெண் வாழ்க்கையின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதை உறுதி செய்ய இந்த தின பொருத்தம் பார்ப்பது அவசியமாகும். தினப்பொருத்தம் பொதுவாக 27 நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது. எனினும் இருபத்தி ஏழாவது நட்சத்திரம் இந்த தின பொருத்தம் பார்க்கும் பொழுது ஜோதிட கணக்கீடுகளிலிருந்து இருந்து விலக்கப்படும் என்பது ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கணப்பொருத்தம்

திருமணம் செய்து கொள்ள போகும் ஆண் மற்றும் பெண்ணின் குணாதிசயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ள பார்க்கப்படும் பொருத்தம் இது. 27 நட்சத்திரங்கள், அதன் குணாதிசயங்கள் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று துணைப் பிரிவுகள் அல்லது நான்கு கணங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் “தேவ கணம், மனுஷ கணம், ராட்சஸ கணம்” எனும் மூன்று பிரிவுகளில் அடங்கும். இதில் மணமகனுடைய நட்சத்திரம் தேவ கணம் பிரிவில் இருந்து மணமகளுடைய நட்சத்திரம் ராட்சச கணம் பிரிவில் இருந்தால் அந்த இருவருக்கும் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மணமகனின் நட்சத்திரம் தேவ கணம் பிரிவிலும், மணமகளின் நட்சத்திரம் மனுஷ்ய கான பிரிவில் இருந்தாலும் அல்லது இருவரும் தேவகணம் அல்லது மனுஷ்ய கணம் நட்சத்திர பிரிவில் இருந்தாலும் திருமணம் செய்யலாம்.

மகேந்திர பொருத்தம்

திருமண பொருத்தம் பார்க்கும் போது மற்ற எல்லா பொருத்தங்களை காட்டிலும் இந்த மகேந்திர பொருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் திருமணமாகும் தம்பதிகளின் இல்லற வாழ்விற்கு ஆதாரமாக விளங்குவது அவர்களுக்கு உண்டாகும் நல்ல சந்ததிகள் தான். ஒரு ஜாதக கட்டத்தின் அடிப்படையில் திருமணமாகப் போகும் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பிறக்கவிருக்கின்ற குழந்தையை பற்றி கூறும் பொருத்தம் தான் இந்த மகேந்திரப் பொருத்தமாகும். இந்த மகேந்திரப் பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே அந்த மணமக்களுக்கு திருமணம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் இல்லற வாழ்க்கைக்கு செல்வம் என்பது மிகவும் இன்றியமையாததாகும். ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் என்பது பொதுவாக திருமணம் செய்யப் போகின்ற ஆண் மற்றும் பெண் ஜாதகங்களில், அவர்களுக்கு ஏற்படப் போகின்ற செல்வ சேர்க்கை மற்றும் வளமான வாழ்க்கை பற்றி அறிந்துகொள்வதற்காக பார்க்கப்படுகின்ற பொருத்தமாகும். அக்காலம் முதலே செல்வம் ஈட்டுவது என்பது ஒரு ஆணின் முக்கிய கடமையாக கருதப்படுவதால் பொதுவாக இந்த பொருத்தம் பெண்ணின் ஜாதகத்தை காட்டிலும் மணமகனின் ஜாதகத்திலேயே அதிகம் பார்க்கப்படுகின்றது. மகேந்திர பொருத்தத்தை போலவே இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தமும் மணமக்களுக்கு பொருந்தினால் மட்டுமே அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

ராசிப் பொருத்தம்

ராசிப் பொருத்தம் பார்ப்பது என்பது சற்று சிக்கலான விடயமாகும். இந்தப் பொருத்தம் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களை தவிர பிறர் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. ராசிகளில் ஆண் ராசி, பெண் ராசி என இரண்டு வகை உண்டு. மணமக்களின் ஜாதகத்தில் பெண் ராசி தொட்டு ஆண் ராசி வரை 6 எண்ணிக்கைக்கு மேல் இருந்தால் அந்த மணமக்களுக்கு பொருத்தம் உண்டு என்று கூறப்படுகின்றது. எனினும் வேறு சிலர் மணமக்கள் இருவரும் ஒரே ராசி என்றாலும் கூட நட்சத்திரம் மாறுபட்டு இருந்தால் இந்த ராசி பொருத்தம் ஆனது என கருதலாம் எனவும் தெரிவிக்கின்றனர். திருமணம் ஆன தம்பதிகளின் வம்சம் வாழையடி வாழையாக தொடர்வதை உறுதிசெய்ய இந்த ராசிப் பொருத்தம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

யோனிப் பொருத்தம்

திருமணமான ஒரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கை சிறக்க அவர்களின் உடல் மற்றும் உணர்வுகளின் ஒற்றுமை வேண்டும். யோனிப்பொருத்தம் என்பது பொதுவாக தம்பதிகள் இடையேயான தாம்பத்ய வாழ்க்கை சிறப்பு குறித்து தெரிந்துகொள்ள பார்க்கப்படும் ஜாதக ரீதியான பொருத்தம் ஆகும். 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான விலங்கு அம்சம் இருப்பதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருமணமாக இருக்கின்ற ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்களுக்குரிய விலங்குகளின் அம்சம் பொருந்திப் போனால் அது சிறந்த பொருத்தமாக கருதப்படுகிறது. மகேந்திரப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் போல இந்த யோனி பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே மணமக்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது முக்கிய விதியாக கடைபிடிக்கப்படுகிறது.

ராசி அதிபதிப் பொருத்தம்

ஜாதக கட்டத்தில் இருக்கின்ற 12 ராசிகளுக்கும் 12 அதிபர்கள் இருக்கின்றனர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. 12 ராசி அதிபர்களுக்கும் அவர்கள் நிற்கின்ற வீட்டின் கிரகத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் நட்பு, சமம், பகை என மூன்று நிலை இருக்கும். அந்த அடிப்படையில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் ஜாதகங்களில் இருக்கின்ற அந்த ராசியாதிபதி கிரகங்களுக்கும் மற்ற கிரகங்களுக்கும் பகை தவிர்த்து நட்பு சமம் என்கிற இரு அம்சங்கள் மட்டும் அதிகம் ஒத்துப்போனால், அந்த மணமக்களின் ஜாதகம் பொருத்தம் உள்ளதாக கருதப்படுகின்றது.

வசியப் பொருத்தம்

திருமணமாக போகின்ற மணமக்களின் ஜாதகத்தில் இந்த வசிய பொருத்தம் மிக முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்படுகின்றது. மணமக்களின் ராசி, நட்சத்திரங்கள் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஈர்ப்புத் தன்மை இருக்கிறதா என்பதை இந்த வசியப் பொருத்தம் கொண்டு ஜோதிடர்கள் ஆராய்கின்றனர். அப்படி மணமக்களுக்கு அவர்களின் ராசி நட்சத்திர அடிப்படையில் வசியப் பொருத்தம் ஏற்பட்டால் மட்டுமே அந்த மணமக்களுக்கு திருமணம் செய்ய ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். வசியப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யும் பொழுது தம்பதிகள் வேண்டா வெறுப்பாகவே திருமண பந்தத்தில் சேர்ந்து வாழ்க்கை முழுவதும் வாழ வேண்டிய நிலையும் ஏற்படும் என அனுபவம் வாய்ந்த ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ரஜ்ஜு பொருத்தம்

பொருத்தம் என்பது பொதுவாக திருமணம் செய்யப் போகின்ற மணமகனின் ஆயுள் காலத்தைப் பற்றியும் மணமகளின் மாங்கல்ய பலத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள பார்க்கப்படும் பொருத்தமாகும். மற்ற பொருத்தங்களைப் போலவே இந்த ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பதற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஜோதிட அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த ரஜ்ஜு பொருத்தம் மணமக்களின் ஆயுட்காலம் பற்றி கூறும் பொருத்தம் என்பதால் மிக கவனமாக ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். திருமணத்திற்கு பிறகான வாழ்வில் எவ்விதமான கெடு பலன்களும் ஏற்படுவதை தவிர்க்க மணமக்களின் ஜாதகத்தில் இந்த ரஜ்ஜு பொருத்தம் உள்ளதா என்பதை நன்கு ஆராய்ந்து நல்ல பொருத்தம் உள்ளது என்பதை உறுதி செய்த பிறகே மணமக்களுக்கு திருமணம் செய்ய வேண்டும்.

வேதைப் பொருத்தம்

வேதை என்றால் தமிழில் எதிர்வினை என்பது பொருள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு எதிர்வினை ஆற்றுகின்ற நட்சத்திரம் இருக்கும். திருமணமாகப் போகின்ற மணமக்களின் ஜாதகத்தில் இந்த வேதை நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் நிலையில் இருந்தால் அந்த தம்பதிகளுக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, சிலர் பிரிந்து வாழும் நிலையும், ஒரு சிலர் விவாகரத்து பெறும் சூழலையும் ஏற்படுத்திவிடும். இத்தகைய நிலை மணமக்களுக்கு ஏற்படக் கூடாது என நினைப்பவர்கள் அவர்களின் ஜாதகத்தில் இந்த வேதை பொருத்தம் சரியான முறையில் உள்ளதா என்பதை அனுபவம் வாய்ந்த ஜோதிடர் கொண்டு நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

திருமணத்திற்குரிய ஜாதகப் பொருத்தங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது நட்சத்திர பொருத்தம் ஆகும். நமது ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமணம் பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன் பிறந்த நட்சத்திரத்திற்கு, மணமகள் பிறந்த நட்சத்திரத்திற்கும் பொருத்தம் உள்ளதா என்பதை நன்கு பரிசீலிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு கடக ராசிக்கு மகர ராசி மிகச்சிறந்த பொருத்தம் என்பது போல மேலோட்டமாக நட்சத்திர பொருத்தம் பார்க்க கூடாது. மகன் மற்றும் மணமகள் இருவர் ஜாதகர்களின் ஜாதகங்களிலும் அவர்களின் லக்னம் என்ன, அவர்களின் லக்னாதிபதி தற்போது எங்கே உள்ளார்? ஜாதகர்களுக்கு தற்போது என்ன திசை நடக்கிறது? அடுத்து என்ன கிரக திசை வரப்போகிறது போன்ற பலவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -