திருமணம் நட்சத்திர பொருத்தம் அட்டவணை – ஆண்

Astrology

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் எவை என்பது இங்கு வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறியவும் கீழே தகவல் உள்ளது.

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்

வ.எண்ஆண் நட்சத்திரத்திற்குபொருத்தமான பெண் நட்சத்திரங்கள்பொருத்தம்
1அஸ்வனிபரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்உத்தமம்
2பரணிரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனிஉத்தமம்
3கார்த்திகை 1 ம் பாதம்சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2உத்தமம்
4கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4உத்தமம்
5ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதிஉத்தமம்
6மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணிஉத்தமம்
7மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதிஉத்தமம்
8திருவாதிரைபூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
9புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதிஉத்தமம்
10புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், அனுஷம், பரணி, ரோகிணிஉத்தமம்
11பூசம்உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4உத்தமம்
12ஆயில்யம்அஸ்தம், அனுஷம், பூசம்உத்தமம்
13மகம்சித்திரை, அவிட்டம் 3, 4உத்தமம்
14பூரம்உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்உத்தமம்
15உத்திரம் 1 ம் பாதம்பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்உத்தமம்
16உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்பூராடம், திருவோணம், ரேவதிஉத்தமம்
17அஸ்தம்உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
18சித்திரை 1, 2 ம் பாதங்கள்விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்உத்தமம்
19சித்திரை 3, 4 ம் பாதங்கள்விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்உத்தமம்
20சுவாதிஅனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்உத்தமம்
21விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்சதயம், ஆயில்யம்உத்தமம்
22விசாகம் 4 ம் பாதம்சதயம்உத்தமம்
23அனுஷம்உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்உத்தமம்
24கேட்டைதிருவோணம், அனுஷம்உத்தமம்
25மூலம்அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
26பூராடம்உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்உத்தமம்
27உத்திராடம் 1 ம் பாதம்பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்உத்தமம்
28உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்பரணி, மிருகசீரிஷம் 1, 2உத்தமம்
29திருவோணம்உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்உத்தமம்
30அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்உத்தமம்
31அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4உத்தமம்
32சதயம்கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4உத்தமம்
33பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்உத்தமம்
34பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்உத்தமம்
35உத்திரட்டாதிரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4உத்தமம்
36ரேவதிபரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதிஉத்தமம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

வீட்டை கட்டிப்பார் கல்யானைத்தை செய்துபார் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் நினைத்தவுடன் அவர்கள் முதலில் அணுகுவது தோதிடர்களை தான். தங்கள் பிள்ளைகளுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் செய்யபலாமா. இப்போது திருமணம் செய்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் இப்படி பல கேள்விகளை அவர்கள் ஜோதிடர்களிடம் முன்வைப்பதுண்டு.

அடுத்தகட்டமாக ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ ஒரு நல்ல வரன் அமைந்தால் அடுத்து அவர்களுக்கு பொருத்தம் எப்படி இருக்கிறது என்பதை அறியவும் பெற்றோர்கள் நாடுவது ஜோதிடரை தான். ஆனால் சில அடைப்படை பொருத்தங்களை அறிய நாம் ஜோதிடர்களை அணுகவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக பெண் பார்க்க ஆரமிக்கும் சமயங்களில் பொதுவாக ஒரு ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் எவை என்பதை நாம் எளிதாக அறிய முடியும். அப்படி பட்ட ஒரு நட்சத்திர பொருத்தம் அட்டவணை தான் நாம் மேலே இணைத்துள்ளோம்.

இந்த நட்சத்திர பொருத்தம் அட்டவணையை வைத்து ஆண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறிய முடியும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் தான் என்றாலும் அதிலும் பாதம் வாரியாக பலவற்றை பிரிக்க முடியும். அந்த வகையில் பாதம் வாரியாக பொருத்தும் நட்சத்திரங்கள் எவை என்ற தெளிவான அட்டவையே நாம் கொடுத்துள்ளோம்.

ஆயிரம் காலத்து பயிர் என்று கூறப்படும் திருமணத்தை நடத்துவதற்கு முன்பு இது போன்று நட்சத்திரம் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது. ஏன் என்றால் நட்சத்திரங்கள் ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்க இருவர் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்வதென்பது இரு நட்சத்திரங்கள் இணைத்து வாழ்வதற்கு சமமாகிறது. அப்படி இருக்கு, நட்சத்திர பொருத்தம் இருந்தால் மட்டுமே இரு நட்சத்திரங்கள் அடிப்படையில் ஒன்றாக வாழ முடியும். அதனாலேயே நம் முன்னோர்கள் இது போன்ற பொருத்தங்களை பார்க்க சொல்லி உள்ளனர்.

திருமண பொருத்தம் பார்க்கையில் அனைவரும் முதலில் பார்ப்பது நட்சத்திர பொருத்தம் தான். திருமணத்தில் அவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது நட்சத்திர பொருத்தம். மொத்தம் 12 பொருத்தங்கள் இருந்தாலும் திருமணத்திற்கு தேவை சில பொருத்தங்கள் தான். அந்த பொருத்தங்கள் இருந்தால் தாராளமாக திருமணம் செய்யலாம். அந்த வகையில் மேலே உள்ள அட்டவணையை வைத்து திருமணத்திற்கான நட்சத்திர பொருத்தங்களை நீங்க எளிதில் பார்த்து அமோகமான திருமணத்தை செய்து பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனிடம் வேண்டுகிறோம்.

English Overview:
Here we have given marriage natchathira porutham list in tamil. If one want natchathira porutham online in tamil then he can find it here. Natchathira porutham for male and female are here. There are totally 27 nakshatra. for all 27 nakshatra porutham in tamil are given here.