வயது ஆக ஆக திருமணம் கைகூடவில்லையா? திருமண தடை நீக்கும் எளிய பரிகாரம் என்ன?

marraige-arasa-maram
- Advertisement -

திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமான ஒரு திருப்பத்தை தருகிறது. இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்தாக வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வயது ஏற ஏற திருமணம் ஆகவில்லையா? இதனால் பெற்றோர்கள் மனம் வேதனைப்பட்டு கொண்டிருக்கிறதா? ரொம்பவே எளிய பரிகாரத்தை செய்து திருமண தடையை உடைக்கலாம். அப்படியான பரிகாரம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

‘திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்’ என்பார்கள். அதை அவசர அவசரமாக செய்யவும் கூடாது. அதே போல வயதை கடந்து செல்லவும் அனுமதிக்க கூடாது. அந்தந்த காலத்தில் நடக்க வேண்டிய எல்லா நல்ல காரியங்களும் நடந்தாகி விட வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கை சுபீட்சமாக இருக்கும். திருமண தடை உள்ளவர்கள், திருமண யோகம் இல்லாதவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். தினமும் நீங்கள் இரவு தூங்க செல்லும் முன்பு ஒரு கண்ணாடி டம்ளர் முழுவதுமாக தண்ணீரை நிரப்பி வைத்து தலைமாட்டில் வைத்து தூங்க செல்லுங்கள்.

- Advertisement -

அந்த தண்ணீரை குடிக்க கூடாது. அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து சுத்தமான உடையை உடுத்திக் கொண்டு நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு அருகில் இருக்கும் அரச மரத்தை நாடி செல்லுங்கள். அரச மரத்தடி பிள்ளையார் இருந்தாலும் அங்கு செல்லலாம் அல்லது வெறும் அரச மரம் இருந்தாலும் சரிதான். அரசமரம் ஒற்றை அரசாக இருந்தால் இன்னும் சிறப்பு. இந்த அரச மரத்தின் வேருக்கு நீங்கள் கொண்டு சென்ற தண்ணீரை ஊற்றி விட வேண்டும். இது போல தினமும் தொடர்ந்து 43 நாட்கள் வரை செய்ய வேண்டும். 43 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்த பிறகு அரச மரத்திற்கு ஒரு கற்பூரத்தை ஏற்றி வணங்கிக் கொள்ளுங்கள்.

தினமும் அரச மரத்தின் வேருக்கு தண்ணீரை ஊற்றிய பிறகு 9 முறை மரத்தை சுற்றி வளம் வாருங்கள். அரச மரத்தில் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் உடலும், மனமும் தூய்மையாகும். அதுவும் அதிகாலையில் சென்று இதை செய்யும் பொழுது நிறையவே நற்பலன்கள் கிடைக்கும். பெண்களுக்கு இது கருப்பை சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் என்பதால் அந்த காலத்தில் அரச மரத்தை சுற்றி வழிபாடு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதனால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்த 43 நாட்கள் பரிகாரம் செய்யும் வேளையில் வெள்ளிக் கிழமையில் புளிப்பு சுவைத் தரும் உணவு பண்டங்களை உட்கொள்ளக் கூடாது, விரதம் இருக்க வேண்டும். புளிர, புளியோதரை, திராட்சை, எலுமிச்சை, தயிர், நெல்லிக்காய் போன்ற புளிப்பு சுவை கொண்ட உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உடலையும், மனதையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

இல்லாத ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் எனவே உங்களால் முடிந்தவர்களுக்கு உணவு பொட்டலங்களை வாங்கி கொடுத்து வாருங்கள். அது போல செவ்வாய்க் கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை ஒன்றை உங்களுடைய கைகளால் தானம் கொடுக்க வேண்டும். இப்படி இந்த 43 நாட்கள் தூய்மையான உள்ளத்துடன் வழிபாடு செய்து விரதம் மேற்கொண்டு இந்த எளிமையாக பரிகாரம் செய்தால் திருமண தடை நீங்கும். விரைவில் வரன் கை கூடி வரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -