90 நாட்களுக்குள்ளாக திருமண வரம் அருளும் அற்புத பரிகாரம் இதோ

sivaparvathi
- Advertisement -

பொதுவாக இந்தியாவில் காணப்படும் அனைத்து வகலாச்சாரங்களிலும் தர்மம் எனப்படும் அறம் மிக உயர்வானதாக போற்றப்படுகிறது. நம் தமிழ் இலக்கியங்களிலும் அறம் செய்தலை போற்றும் பல பாடல்கள் இருக்கின்றன. அத்தகைய அறம் செய்வதற்கு உறுதுணையாக இருப்பது இல்லற வாழ்க்கை முறையாகும். இளம் வயதில் இருக்கின்ற ஆணும், பெண்ணும் தக்க வயதில் திருமணம் செய்து குடும்பத்தை காப்பதோடு, உலகிற்கு அறம் செய்ய வேண்டும் என்றே அந்த இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட திருமண வாழ்க்கை உண்டாக ஒரு சிலருக்கு மிகவும் காலதாமதமாகிறது. மேற்கூறிய திருமண தடை, தாமதங்களை போக்கும் ஒரு அற்புத தலமாக இருப்பது திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாக நாதசுவாமி கோவில் ஆகும். அங்கு திருமணஞ்சேரி கோயிலில் செய்ய வேண்டிய பரிகார முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Hindu Marriage

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கின்ற திருமணஞ்சேரி என்னும் ஊரில் இருக்கின்ற அருள்மிகு ஸ்ரீ உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் மிகப் பழமையான ஒரு திருத்தலமாகும். சக்தியாகிய பார்வதி தேவி பூமியில் சிவபெருமானை திருமணம் செய்ய விரும்பி தவமிருந்து, திருமணஞ்சேரி என்னும் இத்தலத்தில் சிவபெருமானை திருமணம் செய்ததாக கோவில் புராணம் தெரிவிக்கிறது.

- Advertisement -

திருமணஞ்சேரி கோயிலில் திருமணத்திற்கான பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் ஒரு சுப முகூர்த்த தினத்தில் திருமணஞ்சேரி கோயிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றதும் முதலில் அக்கோயிலின் சப்தகிரி தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து கொண்டு, 2 மலர் மாலைகள், 2 தேங்காய், கற்பூரம், குங்குமம், மஞ்சள், நெய், சந்தனம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாங்கி, அர்ச்சகரிடம் கொடுத்து, கோயில் மூலவராக இருக்கும் கல்யாண சுந்தரருக்கு மாலை சாற்றி வேண்டும். பிறகு சுந்தரர் மற்றும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பூஜைகள் செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கு உள்ள நெய் தீபம் வைக்கப்படும் மேடையில் எண்ணி ஐந்து நெய் தீபங்களை ஏற்ற வேண்டும்.

Thirumanancheri

பிறகு அங்கு திருமண மேடையில் கோயில் அர்ச்சகரால் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, பிரசாதமாக வழங்கப்படும் மலர் மாலையை பத்திரப்படுத்தி உங்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். வீட்டிற்கு சென்றதும் தலைக்கு ஊற்றி குளித்து விட்டு, அந்த மாலையை முறை உங்கள் கழுத்தில் போட்டு, இறைவனை மனதார வணங்கி, அம்மாலையை உங்கள் வீட்டு பூஜையறையிலேயே பத்திரமாக வைக்கவேண்டும்.

- Advertisement -

marriage

பிறகு கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட விபூதி மற்றும் குங்குமத்தை தினமும் உங்களின் நெற்றியிலிட்டு இறைவனை வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்கின்ற 90 நாட்களுக்குள்ளாக திருமணத்திற்கான வரன் அமையும் என்பது இப்பரிகாரம் செய்து பலன் கிடைக்க பெற்ற பக்தர்களின் கருத்தாக உள்ளது. மேலும் இந்த பத்திரப்படுத்தபட்ட மாலையானது திருமணம் ஆன உடனே திருமண தம்பதிகளான கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து திருமணஞ்சேரி கோயிலுக்கு வந்து கோவிலில் அந்த மாலையை குறிப்பிட்ட இடத்தில் இட்ட பிறகு, அங்கிருக்கும் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வேண்டுதலை முடித்து, தங்களின் விருப்பம் போன்ற காணிக்கையை கோயிலுக்கு செலுத்துவது நன்மைகளை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:
கும்ப ராசியினாருக்கான அதிர்ஷ்ட பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thirumanancheri pariharam in Tamil. It is also called as Thirumanam aga pariharam in Tamil or Thirumana parigarangal in Tamil or Thirumanancheri kovil in Tamil or Thirumana thadai neenga pariharam in Tamil.

- Advertisement -