- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருமணத்தில் இருக்கும் தடைகள் விலக

திருமணத்தில் இருக்கும் தடைகள் விலக

- Advertisement -

இருமனம் இணைவது தான் திருமணம் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட இரண்டு மனங்களும் இணைவதற்கு பலவிதமான சம்பிரதாயங்களும் சடங்குகளும் நம்முடைய இந்து மதத்தில் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் ஜாதகம். ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தால்தான் அவர்கள் சிறப்பாக இருப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. எந்த ஒரு செயலாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில் அது நடந்தால் தான் அதன் முழு பலனையும் பெற முடியும் அல்லவா? அந்த வகையில் திருமண வயது வந்த ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் அந்த திருமண வயது வந்த உடனேயே திருமணம் நடைபெற வேண்டும். இல்லை எனில் அவர்களின் வாழ்க்கையில் பல விதமான சங்கடங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும்.

ஒரு சிலருக்கு ஜாதகத்தில் தோஷங்கள் இருக்கும். அந்த தோஷத்தால் திருமணம் தடைப்பட்டு இருக்கும். எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷத்தை நீக்கி திருமண தடையை விலக்கி விரைவிலேயே திருமண யோகத்தை தரக்கூடியவராக திகழ் பவர் தான் சீனிவாச பெருமாள். தோஷங்களும் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

திருமண தடைகள் விலக

சனிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான பொருள் என்றால் அது துளசிதான். துளசியை மாலையாக தொடுத்து வாங்கிக்கொண்டு பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். முதலில் கருடாழ்வாரை பார்த்து திருமண தடை விலக பெருமாளின் அருள் வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு பெருமாள் சன்னதிக்கு சென்று பெருமாளின் கழுத்தில் இந்த மாலையை சாற்ற சொல்லி கொடுக்க வேண்டும். பிறகு தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை யாருக்கு திருமணம் தடைப்பட்டு இருக்கிறதோ அவர்கள் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்துவிட்டு பெருமாளை 11 முறை வலம் வர வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக 11 வாரங்கள் பெருமாளுக்கு துளசி மாலையை கழுத்தில் சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். விரைவிலேயே திருமண யோகம் உண்டாகும். திருமணம் நடைபெற்ற பிறகு கணவன் மனைவி சமேதமாக அதே பெருமாள் ஆலயத்திற்கு சென்று தங்களால் இயன்ற அளவு பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகளை செய்து இருவரின்பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபாட்டு தங்களுடைய சங்கல்பத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை திருமண தடை இருப்பவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து யார் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக செய்யலாம் இதில் முக்கியமான குறிப்பு நாம் வாங்கி தரக்கூடிய துளசி மாலை பெருமாளின் கழுத்தில் போட வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: சங்கடங்களை போக்கும் சனிக்கிழமை வழிபாடு

சூடித் தந்த சுடர்க்கொடி என்று ஆண்டாளை கூறுவார்கள். அப்படி அவர் மாலை தொடுத்து போட்டதின் பலனால் தான் பெருமாளே மணமகனாக வந்தார் என்பதால் நாமும் முழு மனதோடு பெருமாளை நினைத்து துளசி மாலை வாங்கி சாற்ற பெருமாளின் அருளால் நினைத்தது போல் வரன் அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்