கணவனின் முன்னேற்றத்தை தடை செய்யுமா மனைவியின் திருமாங்கல்யம்? எதனால்? ஏன் அப்படி?

mangalyam-kungumam
- Advertisement -

இந்து சமுதாயத்தில் திருமாங்கல்ய சரட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கணவன், மனைவி உறவை பறைசாற்றும் இந்த திருமாங்கல்யம் எப்படி இருக்க வேண்டும்? மனைவி அணிந்திருக்கும் திருமாங்கல்ய சரடு இப்படிப் பராமரித்தால் கணவனுடைய முன்னேற்றம் சிறப்பாக அமையும் என்கிறது சாஸ்திரம். அவ்வகையில் கணவனுடைய முன்னேற்றத்தை தடை செய்யும் திருமாங்கல்யம் எப்படி இருக்கிறது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

mangalyam1

ஒரு பெண் அணிந்திருக்கும் திருமாங்கல்ய கயிறு எப்பொழுதும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக இருப்பது அவசியமாகும். தினமும் குளிக்கும் பொழுது ஒரு முறை மஞ்சளை தேய்த்து குளித்தால் அதன் நிறம் எப்பொழுதும் கருப்பு அடையாமல் மஞ்சளாக இருக்கும். ஆனால் அதை பெரும்பாலும் இன்று யாரும் செய்வது இல்லை. அந்த காலத்தில் மஞ்சள் கிழங்குகள், கிழங்கு தேய்க்கும் கல் போன்றவற்றை குளியல் அறையில் வைத்திருப்பார்கள். குளியலறையில் மஞ்சள் தூள் வைத்திருப்பது குடும்பத்திற்கு நல்லது.

- Advertisement -

மாங்கல்யத்தில் மஞ்சள் கயிறு தெரியும் இடங்களில் மட்டுமாவது மஞ்சளை தினமும் தேய்த்துக் குளிப்பது அவசியமாகும். தங்க சரடு அணிந்திருப்பவர்கள் மஞ்சள் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தினமும் அதில் குங்குமம் வைத்து அழகு பார்க்க வேண்டும். குறைந்தது விசேஷ நாட்களில் மட்டுமாவது திருமாங்கல்யத்தில் கணவன், மனைவியின் திருமாங்கல்யத்திற்கு குங்குமம் வைத்து விட வேண்டும். கணவனால் முடியாத பட்சத்தில் குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள் வைத்து விடலாம்.

mangalyam1

வெள்ளிக்கிழமையில் திருமங்கலத்தில் பூ வைப்பது இன்னும் விசேஷமான பலன்களை கொடுக்கும். கணவனுடைய முன்னேற்றத்தை தடை செய்யும் தடைக் கற்களை உடைத்தெரிய திருமாங்கல்யமும் நமக்கு உதவி செய்யும். இரும்பினால் ஆனால் எந்த பொருட்களையும் திருமாங்கல்ய சரட்டில் மாட்டி வைத்திருக்கக் கூடாது. இரும்பு என்பது சனி பகவானுடைய காரகத்துவம் பெற்ற ஒரு பொருளாகவே இருக்கிறது. இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை திருமாங்கல்ய சரடு உடன் அணிந்து கொள்வது கணவனின் முன்னேற்றத்தை தடுக்கும். சில பெண்கள் தங்கள் தாலியில் ஊக்கு போன்றவற்றை மாட்டி வைத்திருப்பார்கள்.

- Advertisement -

இது போல் ஊக்கு மாட்டி வைப்பது அவ்வளவு நல்லதல்ல. இதனால் தங்கத்திற்கும் கேடு தான். தங்கத்துடன் இரும்பு உராசும் போது ஏற்படக்கூடிய அதிர்வலைகள் எதிர்மறையானது. எனவே தங்கத்துடன் எப்போதும் இரும்பை சேர்க்காதீர்கள். அதே போல நீங்கள் தங்க சங்கிலிகளை அணிந்து கொண்டிருக்கும் போது கூடவே கவரிங் நகைகளை அணிய கூடாது என்று கூறுவார்கள். எனவே தங்கம் அணிந்திருப்பவர்கள், அதனுடன் எந்த விதமான உலோகங்களையும் சேர்த்து அணிவதை தவிர்க்கவும். பீரோவில் நீங்கள் தங்க நகைகளை வைக்கும் பொழுதும் தனித்தனியாக தான் வைக்க வேண்டும். கவரிங் நகைகளுடன் சேர்த்து வைத்தால் தங்கத்தின் தரம் குறையும்.

mangalyam

கணவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பொழுது அல்லது ஏதாவது ஒரு சமயத்தில் நாம் திரு மாங்கல்யத்தை காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்வோம். அது போல் செய்யும் பொழுது நீங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை கண்டிப்பாக காணிக்கை செலுத்த கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். திருமாங்கல்யத்துடன் இருக்கும் மற்ற உருக்கலை நாம் காணிக்கையாக செலுத்தி கொள்ளலாம். ஆனால் திருமாங்கல்யத்தை காணிக்கை செலுத்த வேண்டுமே என நீங்கள் அணிந்திருக்கும் மாங்கல்யத்தை ஒரு பொழுதும் மாற்றக் கூடாது. மாங்கல்யத்திற்கு விரிசல் அல்லது உடையும் தருவாயில் மட்டுமே மாங்கல்யத்தை முறைப்படி மாற்ற வேண்டுமே தவிர, மற்ற சமயங்களில் திருமாங்கல்யத்தை கழட்டுவது, அடகு வைப்பது, காணிக்கை செலுத்துவது போன்றவற்றை செய்வதை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -