இந்த ஒரு கிழமையில் மட்டும் திருப்பதி சென்று பெருமாளை தரிசித்தால் பொன், பொருள் சேர்க்கை என வாழ்வில் மிகச் சிறப்பான நிலையை அடைய முடியும்.

tirupathil
- Advertisement -

இந்தியாவில் இருக்கும் கோயில்களில் திருப்பதி – திருமலை வெங்கடாசலபதி கோயில் மிகுந்த தெய்வீக ஆற்றல் வாய்ந்த ஒரு புண்ணிய தலமாகும். அங்கிருக்கும் 7 மலைகளும், அந்த கோவிலில் இருக்கின்ற 7 நிலை வாசல்களும், மனித உடலில் இருக்கின்ற 7 சூக்கும சக்கரங்களை குறிப்பதாகும். இப்படி பல தாந்திரிக ரகசியங்களை தன்னுள்ளே கொண்ட கோயிலாக திருப்பதி – திருமலை வெங்கடாசலபதி கோயில் திகழ்கின்றது. அந்த ஏழு மலைகளின் மீது வாசம் புரியும் வெங்கடாசலபதியை எவ்வாறு வழிபட்டால் நாம் வாழ்வில் மிகச் சிறப்பான நிலையை அடையலாம் என்பதை குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பூமியில் இருக்கின்ற மனிதர்களின் வாழ்க்கையை இறைவனின் பிரதிநிதியாக நவகிரக நாயகர்கள் நடத்திச் செல்கின்றனர். இந்த நவகிரக நாயகர்களின் ஆசியை நாம் பெறுவதன் மூலம் நமக்கு நவக்கிரகங்களால் ஏற்படுகின்ற கஷ்ட நிலையை தீர்க்கலாம் என்பது அனுபவம் பெற்ற முன்னோர்களின் வாக்காகும். நவகிரக ஆதிக்கம் கொண்ட கோயில்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே இருக்கின்றன. அதில் “மனோகாரகன்” எனப்படும் சந்திர பகவானுக்குரிய கோயிலாக திருப்பதி – திருமலை வெங்கடாசலபதி கோயில் திகழ்கிறது.

- Advertisement -

தெய்வீக புராணங்களின் படி சந்திர பகவான் மகா லட்சுமி தேவியின் சகோதரர் ஆவார். எனவே சந்திர பகவான் ஆதிக்கம் கொண்ட திருப்பதி – திருமலை பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் வறுமை நிலையை தீர்க்கும்படி சந்திர பகவான், திருமலை வெங்கடாசலபதி இதயத்தில் வாசம் செய்யும் தனது சகோதரியான மகாலட்சுமி தாயாரை வேண்டுகிறார் எனவும், அதன் காரணமாகவே இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு செல்வ நிலை உயர பெருமாளின் இதயத்தில் வாசம் செய்கின்ற லட்சுமி தாயார் அருள் புரிவதாகவும் ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே தான் சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமையில் திருப்பதி – திருமலை வெங்கடாசலபதியை வழிபடுவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகின்றது.

திருப்பதி செல்ல உகந்த நாள்

வாழ்க்கையில் செல்வம் பலத்துடன் மற்ற எல்லா பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழ, ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வருகின்ற முதல் திங்கட்கிழமை அன்று திருப்பதி – திருமலைக்குச் சென்று திருமலை வெங்கடாஜலபதி கோயிலில் மதியம் 12 மணிக்குள்ளாக திருமலை வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வழிபட்டால் மிக சிறப்பான வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.

- Advertisement -

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வருகின்ற முதல் திங்கட்கிழமை அன்று திருப்பதி பெருமாளை வழிபட செல்பவர்கள் திருப்பதியில் இருந்து மலை மீது இருக்கும் திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்கு கார், பேருந்து போன்ற வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் “அலிபிரி” எனும் பகுதியில் திருமலைக்கு செல்ல அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளின் வழியாக, ஏழு மலைகளின் மீது நடந்தேறிச் சென்று திருப்பதி பெருமாளின் தரிசனத்தை கண்டால் பலன் நிச்சயமாக கிடைக்கும்.

திருமலை வெங்கடாசலபதியை படிக்கட்டுகளில் ஏறி, நடந்து சென்று தரிசிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் மட்டுமே திருப்பதி அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு வாகனங்களில் சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும்.

- Advertisement -

மேலே கூறப்பட்டிருக்கும் இந்த பரிகார முறை ஒரு சிலருக்கு எளிமையானதாகவும், பெரும்பாலானோருக்கு இந்தப் பரிகாரம், செய்வதற்கு மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஏனெனில் சுற்றத்தின் பிறப்பு – இறப்பு, பொருளாதார சூழ்நிலை மற்றும் இன்ன பிற நிகழ்வுகள் போன்ற காரணங்களால் அனைவருக்குமே திருப்பதி – திருமலைக்கு தொடர்ந்து 12 மாதங்களின் முதல் திங்கட்கிழமை அன்று சென்று பெருமாளை தரிசிப்பது என்பது சாத்தியமாகாது.

மேலும், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் திருப்பதி – திருமலைக்கு அதிக பட்சம் ஒரு நாளிலேயே சென்று, தரிசித்துவிட்டு திரும்பக்கூடிய நிலையில் இருக்கின்றனர்.

அதே நேரம் தமிழ்நாட்டின் ஏனைய பிற மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் திருப்பதி-திருமலை கோயிலுக்கு சென்று வருவது என்பது எளிதில் இயலாத காரியமாக உள்ளது. இப்படி செல்ல முடியாதவர்கள், வருடத்தில் இரண்டு முறையாவது எந்த ஒரு தமிழ் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று திருப்பதி – திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதால், அவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தொடர்ந்து 12 தமிழ் மாதங்களும் திருப்பதி – திருமலைக்கு சென்று வழிபட முடியாதவர்கள், இடையில் ஒரு மாதம் திருப்பதிக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டால், அது குறித்து வருந்தாமல், 12 மாதம் எனும் எண்ணிக்கை முடிய மட்டும் திருப்பதி – திருமலைக்குச் சென்று பெருமாளை வழிபட்டால் போதும்.

இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் திருப்பதி திருமலைக்கு சென்று வழிபடுபவர்களுக்கும், 6 மாதத்திற்கு ஒரு முறை திருப்பதி திருமலைக்குச் சென்று வழிபடுபவர்களுக்கும் திருப்பதி மலை வாழும் வெங்கடாஜலபதியின் அருளால் வாழ்வில் ஏற்பட்டிருக்கின்ற எத்தகைய கஷ்ட நிலையும் தீரும். படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் விரைவில் தீரும். செல்வ வளம் பெருகும்.

- Advertisement -