பக்கத்து வீட்டுக்காரங்க முதல் சொந்தக்காரங்க வரை உங்களைப் பார்த்து பொறாமைப் படுகிறார்களா? அப்படின்னா உங்க வீட்டு வாசல்ல இந்த செடிகளை வளர்த்து பாருங்க!

thirusti-sevvarali
- Advertisement -

ஒருவர் கஷ்டப்பட்டு முன்னேறி வரும் பொழுது அவர்களுக்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் இந்த பக்கத்து வீட்டுக்காரங்க மற்றும் எதிர் வீட்டுக்காரங்க எல்லாம், ‘இவன் மட்டும் எப்படி இப்படி சம்பாதித்து பிழைக்கிறான்? இவன் குறுக்கு வழியில் தான் சம்பாதித்து இருப்பான்!’, என்று அரசல் புரசலாக எல்லோரிடமும் புலம்பி கொண்டு இருப்பார்கள். அதிலும் இவர்களை விட நம் வீட்டு சொந்தக்காரர்களை சொல்லவே வேண்டாம். ஒன்றுக்கு இரண்டாக கதை கட்டி விடுவார்கள். இப்படி நம்மை சுற்றி இருக்கும் பொறாமை பார்வையில் இருந்து நாம் சுலபமாகத் தப்பித்துக் கொள்ள, நம் வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள் என்னென்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

karunthulasi1

முதலில் வீட்டில் கட்டாயம் துளசி செடியை வளர்க்க வேண்டும். துளசி இருக்கும் இல்லங்களில் எதிர்மறை சக்திகள் தலைதெறிக்க ஓடும் என்பது சாஸ்திரம். வீட்டிற்குள் வரும் ஆபத்துக்களை முதலில் துளசி செடி தான் தன்னை அர்ப்பணித்து கிரகித்துக் கொள்ளும். உங்கள் வீட்டில் நன்கு செழித்து வளர்ந்த துளசி செடி, திடீரென பட்டுப் போய் விட்டால் உங்களுக்கு வர இருந்த ஆபத்தை அது ஏற்றுக் கொண்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

- Advertisement -

இது போல ஒவ்வொரு வகையான செடிகளுக்கும் ஒவ்வொரு வகையான தன்மை உண்டு. அந்த வகையில் வீட்டின் பிரதான வாசலில் அதாவது நீங்கள் கோலம் போடும் இடத்தில் இரண்டு புறத்திலும் ஏதாவது ஒன்றில் சிகப்பு நிற செம்பருத்தி செடியை வளர்த்து பாருங்கள். சிகப்பு நிற செம்பருத்தி அந்த இடத்தில் நீங்கள் வளர்த்தால் உங்கள் மீது விழும் கெட்ட பார்வைகளை அது தன்னுள் கிரகித்து கொள்ளும். சாலையில் உங்கள் வீட்டை பார்த்து செல்பவர்களுக்கு முதலில் அந்த செடியின் அடர்த்தியான நிறமும், பசுமையான கொத்துக் கொத்தாகப் பூக்கும் பூக்களும் தான் கண்களுக்கு தெரியும். இதனால் உங்கள் மீது இருக்கும் திருஷ்டி பார்வை அதன் மீது பட்டுவிடும். அதனால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவே கவலை கொள்ளத் தேவையில்லை.

katralai

வீட்டிற்கு முன்புறம் கற்றாழைச் செடியை நட்டு வளர்க்கலாம். முட்கள் நிறைந்த இந்த கற்றாழைச் செடியை வீட்டிற்கு முன் கொத்துக் கொத்தாக வளர்த்தால் உங்களுக்கு ஏற்பட இருக்கும் அத்தனை எதிர்ப்புகளையும், தீய ஷக்திகளையும் அது ஈர்த்துக் கொள்ளும். கற்றாழையை சிலர் வாசலில் கட்டி தொங்க விடுவதையும் நாம் பார்த்திருப்போம். கற்றாழைக்கு இத்தகைய திருஷ்டிகளை கழித்துக் கொள்ளும் தன்மை உண்டு.

- Advertisement -

செவ்வரளி, பொன்னரளி, மருதாணி, மாதுளை ஆகிய செடிகளையும் வீட்டிற்கு முன் வளர்க்கலாம். செவ்வரளி வீட்டிற்கு முன் வளர்ப்பது குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள். ஆனால் அதனுடன் மருதாணி அல்லது மாதுளை செடி சேர்த்து வளர்த்தால் திருஷ்டி கழியும். பகைவர்கள், எதிரிகள், சொந்தக்காரர்கள் உடைய பொறாமை கண்கள் ஆகிய அத்தனையும் ஒழியும்.

gold arali

வீட்டில் பொன்னரளி வளர்ப்பவர்கள் அதனுடன் இதே போல மாதுளை அல்லது மருதாணியை சேர்த்து வளர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும். அரளிச்செடி அசுத்தமான காற்றை ஈர்த்துக் கொள்ளும் என்பதால் தான் அதனை நெடுஞ்சாலைகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனப் புகையை ஈர்த்து கொள்ளும். எனவே அது வீட்டிற்கு சுத்தமான காற்றையும், திருஷ்டியை கழித்து சுத்தமான நேர்மறை ஆற்றல்களையும் நமக்கு கொடுக்கும். எனவே வீட்டிற்கு முன்னால் இந்த செடிகளை இப்படி வளர்த்தால் எவ்விதமான பொறாமையும் உங்களை நெருங்காது.

- Advertisement -