செல்வ செழிப்புடன் வாழ வளர்பிறை திருதியை வழிபாடு

lakshmi narayanar
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பான முறையில் பெருமாளை வழிபட வேண்டும். காத்தல் தொழிலை செய்யக்கூடிய பெருமாளை நாம் வழிபடும் பொழுது நம் வாழ்வில் நமக்கு செல்வ நிலை என்பது அதிகரிக்கும். அப்படி பெருமாளின் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த நாளை பயன்படுத்தி வழிபட்டால் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

மகாலட்சுமி தாயாரை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பான முறையில் பெருமாளை வழிபட வேண்டும். பெருமாளை வழிப்படாமல் மகாலட்சுமி தாயாரை மட்டும் வழிபட்டால் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்காது. பதிபக்தி நிறைந்த மகாலட்சுமி தாயார் தன் கணவனை நினைக்காதவர் இல்லத்தில் குடியேற மாட்டாள். அதனால் முதலில் நாம் பெருமாளை வணங்கி பிறகு மகாலட்சுமி தாயாரை வணங்கலாம் அல்லது மகாலட்சுமி தாயாரை வணங்கியவுடன் பெருமாளை வணங்கலாம். பெருமாளை மட்டும் வணங்கினாலும் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

இப்படி பெருமாளை வழிப்பட வேண்டிய நாட்கள் என்று பார்க்கும் பொழுது அனைவரும் சனிக்கிழமையை தேர்வு செய்வார்கள். இன்னும் சிலரோ புதன்கிழமையை தேர்வு செய்வார்கள். கிழமையின் அடிப்படையில் பார்க்கும் பொழுது புதன்கிழமையும், சனிக்கிழமையும் பெருமாளுக்கு உகந்த கிழமை தான் என்றாலும் திதி அடிப்படையில் பார்க்கும் பொழுது வளர்பிறையில் வரக்கூடிய திருதியை நாள் அன்று பெருமாளை வழிபடும் பொழுது நமக்கு அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

எப்படி வழிபட வேண்டும்? திருதியை நாளன்று அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும் பொழுது அவருக்கு தாமரை மலர் மாலை, துளசி மாலை இவற்றை வாங்கிக்கொண்டு போய் கொடுக்க வேண்டும். மாலையாக தர முடியாவிட்டாலும் ஒரு தாமரை மலர் ஒரு கட்டு துளசி என்று சிறிதளவாவது வாங்கி தர வேண்டும். அவருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு இரண்டு கைகளிலும் குபேர முத்திரையை வைத்துக்கொண்டு பெருமாளின் சன்னதியை 27 முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

27 முறையும் கண்டிப்பான முறையில் கையில் குபேர முத்திரை இருக்க வேண்டும். இந்த வழிபாட்டை பெருமாள் சன்னதியில் செய்யலாம். அதை விட விசேஷமாக லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர் சன்னிதானத்தை குபேர முத்திரையுடன் 27 முறை வலம் வருவது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். இந்த முறையில் தொடர்ந்து பதினைந்து மாதங்கள் வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எடுத்த காரியத்தில் வெற்றி பெற படிக்க வேண்டிய திருப்புகழ்

இப்படி வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருள் கிடைக்க பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

- Advertisement -