- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருவோண விரதம் பெருமாள் வழிபாடு 2025

திருவோண விரதம் பெருமாள் வழிபாடு 2025

- Advertisement -

அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்லுவார்கள். அது போல தான் இன்று செல்வம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நம்மை மதிப்பதற்கு ஒரு புழு பூச்சி கூட கிடையாது. செல்வம் மட்டும் இருந்துவிட்டால் போதுமா. உண்மையான பணக்காரர் யார் தெரியுமா. நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடு வாழ்பவர்கள் தான் உண்மையிலேயே செல்வந்தர்கள்.

ஆக இன்றைய சூழ்நிலைக்கு செல்வ செழிப்பும் நமக்கு தேவை. நோய்நொடி இல்லாத வாழ்க்கையும் தேவை. இந்த இரண்டையும் ஒருசேர பெறுவதற்கு இந்த திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். திருவோண நட்சத்திரம் பெருமாளின் நட்சத்திரம். நீங்கள் இந்த திருவோண நட்சத்திரத்திற்கு விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தாலும் சரி, நாங்கள் விரதமே இல்லை காலையிலிருந்து பலகாரம் சாப்பிட்டு விட்டோம்.

- Advertisement -

இட்லி தோசை சாப்பிட்டு விட்டோம் என்றாலும் தவறே கிடையாது. மதியம் ஒரு பொழுது சாதம் சாப்பிட முடியாமல் இருக்க முடியும் என்றால், விரதம் இருந்து மாலை பெருமாளை வழிபாடு செய்து விட்டு, இரவு நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். மாலை வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளுக்கு அப்பம் செய்து நெய்வேதியமாக செய்து வைத்து, வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

பெருமாளுக்கு துளசி இலைகளை வாங்கி போட்டு விளக்கு ஏற்றி உங்களுடைய பிரச்சனைகள் தீர பிரார்த்தனை செய்தால் வேண்டிய வேண்டுதல் அப்படியே நடக்கும். உங்கள் வீட்டு பக்கத்தில் பெருமாள் கோவில் இருக்கிறதா. அங்கு செல்லுங்கள். பெருமாளுக்கு ஒரு டெஜன் வாழைப்பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கொஞ்சமாக துளசி இலைகள், கொஞ்சமாக பச்சை கற்பூரம் வாங்கிகோங்க. வாழைப்பழத்தை பெருமாள் பாதத்தில் வைத்து எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பழத்தை தானம் செய்து விடுங்கள். உங்களுடைய தீராத நோய்நொடி தீர இந்த தானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

துளசி இலைகளை பெருமாளுக்கு சாத்தி விடுவார்கள். பிரசாதமாக இரண்டு இலைகளை மட்டும் திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரத்தை பெருமாள் பாதத்தில் வைத்து மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பச்சை கற்பூரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொஞ்சம் பணம் வைக்கும் பெட்டியில், பூஜை அறையில், சமையலறையில் மசாலா டப்பாவுக்கு பக்கத்தில், ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வையுங்கள்.

- Advertisement -

இப்படி வீட்டில் எல்லா இடத்திலும் பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட பச்சைக் கற்பூரத்தை வைத்தால் வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகி வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா. இன்று கோவிந்தா ! கோவிந்தா ! கோவிந்தா ! என்ற நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். கணக்கே கிடையாது.

இதையும் படிக்கலாமே: பிரச்சினையை நீக்கி மகிழ்ச்சியை தரும் இலைகள்

நேரம் கிடைக்கும்போது, ஓய்வு கிடைக்கும் போது, படுக்கும் போது, தூங்கும் போது, இந்த நாமத்தை சொல்லிவிட்டு பிறகு உங்களுடைய வேலையை பாருங்கள். அந்த வைகுண்டத்தில் பெருமாளின் பாதத்தில் இடம் கிடைக்க இந்த ஒரு வார்த்தை மட்டுமே போதும். கோவிந்தா கோவிந்தா என்ற திருநாமத்தோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்