இந்த 1 மந்திரம் உச்சரித்தால் பரம ஏழையும் கோடீஸ்வரன் ஆகிவிடுவானாம். எப்படி?

மனிதனாக பிறப்பதே பிறவி கடனை அடைக்க தான் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. எந்த கடனை அடைக்கவும் உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும். எண்ணத்தில் வன்மம் இருந்தால் வாழ்வில் ஏற்றமும் இருக்காது. ஏற்றம் பெற மனத்தெளிவு வேண்டும். அதற்கு இறை அருள் பெற வேண்டும் என்பது நியதி. மந்திரங்கள் உச்சரிப்பது இறை அருள் முழுமையாக பெறுவதற்கே என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மை. சாதாரண கல் கூட சக்தி பெறுவது மந்திர உச்சாடனம் செய்வதால் தான். அதில் இந்த மந்திரம் உச்சரித்தால் எந்த தீய சக்தியும் உங்களை நெருங்காது. கெட்ட எண்ணங்களுடன் உங்களை நெருங்குபர்கள் எவரானாலும் வீழ்ச்சியை சந்திப்பார்கள். பரம ஏழையையும் கோடீஸ்வரனாக மாற்றும் இந்த மந்திரம் பற்றிய தகவல்கள் இப்பதிவில் காண்போம்.

mantra sign

‘வைகறையில் எழுபவன் வைகுந்தத்தை ஆள்வான்’ என்ற கூற்றுக்கு இணங்க எவர் ஒருவர் இந்த மந்திரத்தை பிரம்ம மூகூர்த்ததில் எழுந்து உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு சகல, சௌபாக்கியங்களும் கிட்டும். எல்லா நலன்களும் பெற்று புகழுடன் நீடூழி வாழ்வார்கள். இந்த மந்திரம் உஷ்ண சக்தி பெற்றது என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே மந்திரம் சொல்பவர்கள் குளிர்ச்சி பொருந்திய உணவுகளை உட்கொள்வது நல்லது. விஷ்வாமித்ரர் மனிதர்களின் நல்வாழ்விற்கு அருளிய காயத்ரி மந்திரம் தான் அது. காலை வேளையில் காயத்ரி மந்திரம் கூறினால் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் பெறும். முகம் பிரகாசம் அடையும். இல்லத்தில் லக்ஷ்மி பரிபூரணமாக வாசம் செய்வாள்.

காயத்ரி மந்திரம் இதோ:

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

gayatri

- Advertisement -

காயத்ரி மந்திரம் உச்சரித்தால் எப்படி கோடீஸ்வரன் ஆக முடியும்? என்ற கேள்விக்கு கதை சுருக்கம் காணலாம். ஒரு முறை அக்பர் மாளிகையில் தினமும் யாசகம் கேட்டு வந்த ஒரு பெரியவரை மகான் கோலத்தில் மன்னர் அக்பர் கண்டு வியந்தார். என்னடா இது? சில நாட்களுக்கு முன்பு வரை நம்மிடம் பிச்சை கேட்டு வாழ்ந்து வந்த இந்த முதியவரை இன்று மகான் என்று மக்கள் கொண்டாடுகிறார்களே எப்படி இது நிகழ்ந்தது என்று சிந்தித்து கொண்டு இருந்தார். கூட்டம் கலைந்து அந்த முதியவரிடமே சென்று கேட்டும் விட்டார் அக்பர். அதற்கு அந்த பெரியவர் அருகில் நின்று கொண்டிருந்த பீர்பாலை சுட்டி காட்டி மன்னர் பெருமானே பீர்பால் தான் என்னை காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் அதிக பணம் தருகிறேன் என்று கூறினார். நானும் பணம் கிடைக்கிறதே என்று அவர் கோரியவாறு உச்சரித்து வந்தேன். ஆனால் என்னை அறியாமல் என் உடலில் புது வித மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். பின்னர் பக்தி சிரத்தையுடன் கூறி வந்தேன். அதனால் உள்ளம் சக்தி பெறுவதை கண்டேன். இந்த சக்தியால் தான் இன்று மக்களுக்கு என்னால் அருள்வாக்கு கூற முடிகிறது. தீரா பிணி தீர ஆசி வழங்குகிறேன் என்றார்.

gayatri

சாதாரண மனிதனையும் தெய்வீக சக்தி பெற்ற மனிதராக மாற்றிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். உடனே அனைவரும் கோடீஸ்வரனாக மாறி விட முடியுமா என்று கேட்கலாம். நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் உச்சரித்து வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே
தொடர் தோல்வியை தடுத்துநிறுத்த இந்த மந்திரத்தை 41 நாட்கள் உச்சரித்து பாருங்கள்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Gayathri manthiram. Gayathri mantra in Tamil. Gayathri mantras Tamil. Gayathri manthram nanmaigal in Tamil.