இந்த வாரம் உங்கள் ராசிக்கு எதெல்லாம் அதிஷ்டமானது தெரியுமா ?

navagraha

நவம்பர் 20 முதல் 26ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamஅதிர்ஷ்ட நாள்கள்:

அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு- 22,23,24,26
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,23,24,25
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,24,25,26

அதிர்ஷ்ட எண்கள்: 1,6,7
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்    உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

- Advertisement -

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
rishabamஅதிர்ஷ்ட நாள்கள்:

கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,24,25,26
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22,25,26
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21,22,23,26

அதிர்ஷ்ட எண்கள்: 2,4,6

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:
midhunamஅதிர்ஷ்ட நாள்கள்:

மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21,22,23,26
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,22,23,24
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,23,24,25

அதிர்ஷ்ட எண்கள்: 5,7,9

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்: 

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே -அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடகம்:
kadagamஅதிர்ஷ்ட நாள்கள்:

புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,23,24,25
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,22,24,25,26
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21,22,23,25,26

அதிர்ஷ்ட எண்கள்: 3,7,9

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

கூற வேண்டிய மந்திரம்:

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:
simmamஅதிர்ஷ்ட நாள்கள்:

மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 22,23,24,26
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,23,24,25
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,24,25,26

அதிர்ஷ்ட எண்கள்: 3,5

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கூற வேண்டிய மந்திரம்:

விநாயகனே வெவ்வினையை  வேரறுக்கவல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில்  பணிமின் கனிந்து

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி:
kanniஅதிர்ஷ்ட நாள்கள்:

உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20,21,24,25,26
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 22,25,26
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 21,22,23,26

அதிர்ஷ்ட எண்கள்: 2,5

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

கூற வேண்டிய மந்திரம்:

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

துலாம்:
thulamஅதிர்ஷ்ட நாள்கள்:

சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 21,22,23,26
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20,22,23,24
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,23,24,25

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,7

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

கூற வேண்டிய மந்திரம்: 

அஞ்சிலே ஒன்று பெற்றான். அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக. ஆர் உயிர் காக்க ஏகி.
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான். அவன் எம்மை அளித்துக் காப்பான்.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: 
virichigamஅதிர்ஷ்ட நாள்கள்:

விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,23,24,25
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,22,24,25,26
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21,22,23,25,26

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

தனுசு:
dhanusuஅதிர்ஷ்ட நாள்கள்:

மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 22,23,24,26
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,23,24,25
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20,21,24,25,26

அதிர்ஷ்ட எண்கள்: 4,5,9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்.

கூற வேண்டிய மந்திரம்: 

துதிப்போர்க்கு துன்பம்போம் வல்வினைபோம் – நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்த
சஷ்டி கவசம்தனை.
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மகரம்:
magaramஅதிர்ஷ்ட நாள்கள்:  

உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20,21,24,25,26
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22,25,26
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21,22,23,26

அதிர்ஷ்ட எண்கள்: 2,6,7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

கூற வேண்டிய மந்திரம்: 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
kumbamஅதிர்ஷ்ட நாள்கள்:

அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21,22,23,26
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,22,23,24  
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,23,24,25

அதிர்ஷ்ட எண்கள்: 1,3,4

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்: 

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்:
meenamஅதிர்ஷ்ட நாள்கள்:

பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20,21,23,24,25
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20,21,22,24,25,26
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21,22,23,25,26

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கூற வேண்டிய மந்திரம்:

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

அதிஷ்டத்தை பற்றி கூறும் இந்த ராசி பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.