உங்களிடம் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலக சனிக்கிழமை அன்று இப்படி திருஷ்டி சுத்தி பாருங்கள். அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் பெற்று நலமோடு வாழலாம்.

thosam thrustri
- Advertisement -

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு கஷ்டம் ஏற்படும். அந்த கஷ்டம் ஏற்படுவதற்கு அவர்களிடம் இருக்கக்கூடிய தோஷமே காரணமாக விளங்குகிறது. நாம் அறியாமல் செய்த தவறுக்கு கூட நமக்கு தோஷங்கள் ஏற்படும். அவை நமக்கு தெரியாவிட்டாலும் அதனால் நாம் பல கஷ்டங்களை அனுபவிப்போம். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஏற்பட்டிருக்கும் எந்த விதமான தோஷமாக இருந்தாலும் சனிக்கிழமை அன்று எப்படி திருஷ்டி சுத்தி போட்டால் நம்மை விட்டு விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பழங்காலம் முதற்கொண்டு தெரியாமல் செய்த தவறிற்காக முனிவர்கள் சபிப்பதும் அதனால் தோஷம் ஏற்படுவதும் அந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக பரிகாரம் செய்வது என்று பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். இன்றைய சூழலில் நம் முன் சபிப்பவர்களை விட நம் பின்னே சந்திப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஒரு நேரம் இல்லை என்றாலும் ஒரு நேரம் அந்த சாபம் என்பது நம்மை வந்து சேரும். அதனால் நாம் கஷ்டப்படுவோம். மனிதர்கள் தான் சபிப்பார்கள் என்று அர்த்தமல்ல. உயிருள்ள எந்த ஜீவனாக இருந்தாலும் அந்த ஜீவனுக்கு நம்மால் கஷ்டம் நேரும் பொழுது அந்த ஜீவன் மனம் வருந்தினாலே அது சாபமாக தான் வரும். அதனால் நாம் கஷ்டப்படுவோம். இந்த சாபங்கள் அனைத்தும் சேர்ந்துதான் ஏழரை சனி என்ற பெயரில் நம்மை ஆட்டிப் படைக்கிறது என்று கூட நாம் சொல்லலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். சனிக்கிழமை என்பது சனிபகவானுக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய நிறம் கருப்பு என்பதும் அனைவருக்கும் தெரியும். சனிக்கிழமை நாம் செய்யும் பரிகாரமாக இருந்தாலும், வழிபாடாக இருந்தாலும் அதை சனி பகவான் ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு நிற துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நம் கையில் இருந்து ஒரு கைப்பிடி அளவு உப்பை போட வேண்டும். அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு அந்த துணியை கருப்பு நிற நூலால் மூட்டையாக கட்ட வேண்டும். அந்த மூட்டையை நம் கையில் வைத்துக் கொண்டு கிழக்கு முகமாக நின்று நம் தலையை ஏழு முறை சுற்ற வேண்டும். நாம் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் பிறர் நமக்காக செய்யக்கூடாது.

பிறகு அருகில் இருக்கும் அரச மரத்தடியில் அந்த மூட்டையை வைத்து விட வேண்டும். அரசமரம் அருகில் இல்லாத பட்சத்தில் அந்த மூட்டையை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். பிறகு வீட்டிற்குள் நுழையும் பொழுது கை, கால், முகங்கள் அனைத்தையும் கழுவி விட்டு உள்ளே வர வேண்டும். முடிந்தால் குளித்துவிட்டு கூட வரலாம். பெண்கள் மாதவிடாய் நேரங்களிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அதில் ஒரு சின்ன நிபந்தனை, அன்று தலைக்கு குளித்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த பரிகாரத்தை செய்தால் அது கூடுதல் விசேஷமாக இருக்கும் தங்கள் கைப்படத்தான் அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு போய் அரசமரத்தடியிலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வீட்டில் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய செவ்வாய், வெள்ளியில் தவறாமல் செய்ய வேண்டியது என்ன? காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்து வந்தது நாம் செய்கிறோமா?

இவ்வாறு தொடர்ந்து 21 சனிக்கிழமை இந்த பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகும். சனிபகவானின் அருளும் நமக்கு கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்.

- Advertisement -