பழ மரத்தில் அணில் தொல்லையா? என்ன செய்யலாம்? பலாப்பழத்தில் இருக்கும் சுளைகளை உரிக்காமல் எப்படி தெரிந்து கொள்வது? தென்னை மரத்தில் குலைகுலையாய் காய்கள் காய்க்க இப்படி செய்து பாருங்கள்!

tree-gardening

வீட்டில் தென்னை மரம் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம் தான். கிட்டத்தட்ட தெருவுக்கு 10 தென்னை மரமாவது இருக்கும். வீட்டில் வைத்திருக்கும் தென்னை மரத்தில் அதிகம் காய்கள் காய்ப்பதில்லையா? இதற்கு அருமையான யோசனை உள்ளது. இதனை ஒரிசா மாநில விவசாயிகள் ரகசியமாக கடைபிடித்து வரும் ஒரு வழிமுறை ஆகும். பலாப்பழத்தில் இருக்கும் சுளைகளை உரிக்காமலேயே தெரிந்து கொள்ளலாம் தெரியுமா? அது எப்படி? தோட்டத்தில் அணில் தொல்லையை ஒழித்துக் கட்டுவது எப்படி? காய்த்தூளைப்பான் நோய் தீர என்ன செய்வது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

coconut-tree

தோட்டத்தில் அல்லது வீடுகளில் இருக்கும் தென்னை மரங்களில் குலைகுலையாக காய்கள் காய்த்துத் தொங்க வேண்டுமென்றால் முதலில் தென்னை மரத்தில் இருக்கும் குரும்பைகள் கொட்டாமல் இருக்க வேண்டும். இதனை தவிர்க்க தென்னை மரத்தில் இருக்கும் பாளையில் ஒரு செங்கல்லை கட்டி தொங்க விடுவார்கள். இப்படி செய்தால் குரும்பைகள் கொட்டாமல் உங்களுடைய தென்னைமரத்தில் அதிக அளவில் காய்கள் காய்க்கத் துவங்கும். ட்ரை பண்ணி பார்க்கலாமே..

பலாப்பழம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த முக்கனிகளில் ஒன்றாகும். பலாப்பழம் பிடிக்காது என்று கூறுபவர்கள் இருக்க முடியுமா? அதன் சுவையில் மயங்காதவர்களே இல்லை எனலாம். இன்று குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கும் தைராய்டு பிரச்சனையை சரி செய்யக்கூடிய செம்பு சத்து இந்த பலா பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம் சத்துக்கள் பல் மற்றும் எலும்புகளை மேலும் வலுவாக்கும். ஆனால் இதனை அதிக சூடு என்று பலரும் தவிர்த்து விடுகிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் பலாப்பழத்தை ஒதுக்கிவிடாமல் அடிக்கடி எடுத்துக் கொள்வது சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

palapalam 5

அத்தகைய பலாப்பழத்தை வாங்கிய உடன் அதிலிருக்கும் சுளைகள் எத்தனை என்று உரித்துப் பார்க்காமல் சுலபமாக கூறிவிட முடியும். பலாப்பழத்தின் காம்பிற்கு அருகில் இருக்கும் சிறுசிறு முட்களின் எண்ணிக்கையை எண்ணி பார்க்க வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும் பின்னர் அதில் கிடைக்கும் விடையை ஐந்தால் வகுக்க வேண்டும். வகுத்து கிடைக்கும் எண்ணிக்கை தான் பலாப்பழத்தில் இருக்கும் சுளைகளின் எண்ணிக்கையும் ஆகும். எப்பொழுதும் பலாப்பழத்தை சுவைத்து பார்க்காமல் வாங்கி விடாதீர்கள் பண நட்டம் ஏற்படும்.

- Advertisement -

பழம் காய்க்கும் மரங்களில் அணில் தொல்லை இருக்கும். இந்த அணில் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது. ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குலுக்கி கொள்ளுங்கள். இந்த தண்ணீரை பழ மரங்களில் தெளித்து வந்தால் போதும், ஒரு அணில் கூட அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்காது. பழங்களும் பாதுகாப்பாக இருக்கும்.

அதுபோல் காய்கறி வளர்ப்பில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை, காய்களை துளைக்கும் காய்த்துளைப்பான் நோய் ஆகும். குறிப்பாக அவரைக்காய், கத்திரிக்காய் போன்ற செடிகளை அதிகம் தாக்கும் இந்நோயை எளிதாக கட்டுப்படுத்த முடியும். ஒரு கைப்பிடி அளவிற்கு வேப்பிலையை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொண்டு காய்கறி செடிகளில் வாரம் ஒரு முறை தெளித்து வாருங்கள். அல்லது வேப்ப எண்ணெய்யை கூட உபயோகப்படுத்தலாம். இப்படி செய்ய காய்த்துளைப்பான் நோய் ஏற்படாமல் காய்கள் பசுமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு ஸ்டவ்வை சுத்தம் செய்ய இனி தண்ணீர்கூட தேவையில்லை! பிசுபிசுப்பான அடுப்பை சுத்தம் செய்ய இந்த 2 பொருள் மட்டுமே போதும். தண்ணீர் இல்லாமல் ஸ்டவ்வை எப்படிங்க சுத்தம் செய்வது?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.