உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எலி, அணில், பூச்சி தொல்லையா? இத செஞ்சிப் பாருங்க உங்க செடி பக்கத்துல இவைகள் நெருங்கக்கூட செய்யாது!

rat-anil-in-garden
- Advertisement -

தோட்டம் வைத்து பராமரிப்பது சாதாரண வேலையாக என்றுமே இருந்து விட்டதில்லை. ஒவ்வொரு செடியையும் ஒவ்வொரு குழந்தை போல பக்குவமாக வளர்த்தால் தான் அதன் மகசூலை முழுமையாக நம்மால் அனுபவிக்க முடியும். இப்படி கஷ்டப்பட்டு வளர்த்த செடிகளை எலி, அணில், பூச்சி போன்றவைகள் வந்து நாசப்படுத்தி விட்டால் என்ன செய்வது? இந்த ஜீவராசிகளை கொள்ளாமல் நம் வீட்டு தோட்ட செடிகளை பாதுகாப்பாக எப்படி பராமரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

anil-squirrel

வீட்டு தோட்டத்தில் இருக்கும் ரோஜா செடி போன்ற பூச்செடிகளும், காய், கனி செடிகளும் ஓரளவுக்கு வளர்ந்து விட்ட பின்னர் அங்கு எலிகள், அணில்கள் வந்து தன் வேலையை காண்பிக்க ஆரம்பித்து விடும். அடர்த்தியாக அருகருகே வைக்கப்படும் செடிகளுக்கு இந்த பிரச்சனைகள் அதிகம் உண்டு. மாடித்தோட்டம் ஆக இருந்தாலும், தரையில் வைத்து பயிரிடப்பட்டாலும் இவற்றின் அட்டகாசம் மட்டும் குறைந்தபாடில்லை என்று புலம்புபவர்களா நீங்கள்? அப்படின்னா இந்த ஒரு விஷயத்தை ட்ரை பண்ணி பாருங்க! ஒரு அணில் கூட, ஒரு எலி கூட உங்கள் வீட்டு செடிகளை நெருங்க செய்யாது.

- Advertisement -

எந்த ஒரு ஜீவராசியையும் கொல்வது தவறு எனவே அவற்றைக் கொல்வதற்கான வழிமுறைகளை நாடாமல் இயற்கையான வழியில் எப்படி அவற்றை விரட்டி அடிக்கலாம்? இந்த முறையில் நீங்கள் உங்கள் செடிகளை பராமரித்தால் அவைகள் செடிகளை ஒன்றும் செய்யாது ஆனால் நீங்கள் வைக்கும் சாதம் முதல் மற்ற உணவுப் பொருட்கள் வரை அத்தனையும் சமத்தாக சாப்பிட்டு, சத்தம் கொடுக்காமல் சென்று விடும்.

rat0

ஒரு சிறிய பாத்திரத்தில் ஐந்தாறு பூண்டுகளை நசுக்கி தோலுடன் சேர்த்து கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சமாக வேப்ப எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். வேப்ப எண்ணெயை நன்கு கொதித்து நுரை பொங்கி வந்ததும், அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். கொதிக்கும் பொழுது மிளகு மற்றும் மிளகாய் தூளில் இருக்கும் சாறு எண்ணெயில் கலந்து இருக்கும்.

- Advertisement -

இந்த எண்ணெயை நன்கு ஆறியதும் வடிகட்டி கொள்ளுங்கள். அதனுடன் கூடுதலாக 100ml அளவிற்கு வேப்ப எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செடிகளுக்கு ஸ்பிரே செய்யும் பொழுது ஸ்பிரே பாட்டிலில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 8 முதல் 10 சொட்டுகள் இந்த எண்ணெயை சேர்த்து சிட்டிகை அளவு கொஞ்சமாக சோப்புத் தூள் போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கார எண்ணெய் கலந்த கலவை உங்கள் வீட்டு செடிகளை எதுவும் செய்து விடாது.

veggitable-plants

இதன் வாசம் அணில் மற்றும் எலிகளுக்கு பிடிக்காது எனவே உங்கள் வீட்டு செடிகளுக்கு பக்கத்தில் அணில், எலி, பூச்சிகள் தொந்தரவு எதுவும் இருக்காது. பூச்சி அரிப்பு போன்ற பிரச்சனைகளை அடியோடு ஒழிக்க இந்தப் டிப்ஸ் ரொம்ப உபயோகமாக இருக்கும். நீங்கள் செடிகளுக்கு பக்கத்திலேயே சாதம் வைத்தால் அவற்றை சமத்தாக சாப்பிட்டுவிடும் அணில், உங்கள் செடிகளில் இருக்கும் பூக்களையும் அல்லது காய், கனிகளையும் எவ்விதத்திலும் சேதப்படுத்தாது என்பதால் தைரியமாக இதை செய்து பார்க்கலாம்.

- Advertisement -