வீட்டை கூட்டி சுத்தம் செய்யும் துடைப்பத்தை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. கஷ்டம் உங்கள் வீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க இதுவும் ஒரு காரணம்தான்.

lakshmi-broom-thudaippam
- Advertisement -

கஷ்டங்களை சரி செய்வதற்கு எத்தனையோ பரிகாரங்களை செய்வோம். எவ்வளவோ காசு செலவு செய்து பூஜை புனஸ்காரங்களை மேற்கொள்வோம். ஆனால் கஷ்டங்களை கடந்த பாடாக இருக்காது. பிரச்சனைகள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் சம்மணம் போட்டு அப்படியே நம் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு கண்ணுக்குத் தெரியாத நாம் செய்யும் ஏதோ ஒரு தவறு காரணமாக இருக்கலாம். அதில் இந்த ஒரு தவறை உங்களுடைய வீட்டில் திருத்திப் பாருங்கள். நிச்சயமாக கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்க நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும்.

நம் வீட்டை கூட்டி சுத்தம் செய்யக்கூடிய வேலையை இந்த துடைப்பம் செய்கிறது. அந்த துடைப்பம் இல்லை என்றால் சுத்தம் இல்லை. ஆக இந்த துடைப்பத்திற்கு கொடுக்கக் கூடிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். துடைப்பம் தானே என்று அலட்சியப் போக்கில் அந்த துடைப்பத்தை தூக்கி வீசுவது. துடைப்பத்தை பராமரிக்காமல் அப்படியே போட்டு வைப்பது, துடைப்பத்தை காலால் எட்டி உதைப்பது போன்ற தகாத காரியங்களை செய்யக்கூடாது.

- Advertisement -

துடைப்பத்தை பராமரிப்பது என்றால், துடைப்பத்தைக் கூட வாரத்திற்கு ஒரு முறை சுத்தமாக தண்ணீரில் கழுவி வைக்க வேண்டும். துடைப்பத்தில் அப்படியே முடி சுற்றி இருப்பது அழுக்கு ஒட்டி இருப்பது போன்ற அசுத்தம் இருக்கக் கூடாது. குறிப்பாக வீட்டு குழந்தைகளை துடைப்பதால் அடிக்கக் கூடாது. தொடப்பக்கட்ட பிஞ்சிடும் என்ற வார்த்தையை சொல்லி திட்டக்கூடாது.

சொல்ல போனால் நம் வீட்டிற்கு மகாலட்சுமி அம்சத்தை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றால் அது இந்த துடைப்பதால் தான் முடியும். காரணம் அசுத்தம் நிறைந்த இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டாள். அசுத்தமான இடத்தை சுத்தம் செய்யக்கூடிய வேலையைத்தான் இந்த துடைப்பம் செய்கின்றது. இத்தனை பெருமைகளைக் கொண்ட துடைப்பத்தை நாம் எந்த திசையில் வைக்க வேண்டும். எந்த திசையில் வைக்க கூடாது என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

துடைப்பத்தை நம் வீட்டின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு மூலையில் வைக்கக்கூடாது. தென்மேற்கு மற்றும் வடமேற்கு மூலையில் துடைப்பத்தை வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு வேறு வழியே இல்லை துடைப்பத்தை தென்கிழக்கு வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றால் அந்த துடைப்பம் தரையில் படாத படி வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒரு ஆணி அடித்துக் கூட நூல் கட்டி அந்த துடைப்பத்தை மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

இறுதியாக துடைப்பத்தை பற்றி இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்வோம். பின் சொல்லக்கூடிய இந்த விஷயத்தை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள். அதாவது அந்த காலத்தில் துடைப்பம் என்றால் தனி தனி குச்சிகளாக இருக்கும். அதை ஒரு நூலால் கட்டி தான் பயன்படுத்தும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். அதாவது கயிறு கட்டித் தான் துடைப்பத்தை பயன்படுத்த முடியும். அந்த கயிறு கட்டுவது என்பது துடைப்பத்திற்கு ஒரு கிரீடத்தை வைப்பது போல.

இன்று பேஷனாக துடைப்பங்கள் வந்துவிட்டது. அந்த துடைப்பத்தில் கயிறு கிடையாது. சும்மாவாவது ஒரு நூல் அல்லது கயிறு எடுத்து அந்த துடைப்பத்தில் கட்டி விட்டு விடுங்கள். துடைப்பதால் எந்த பிரச்சனையும் உங்கள் வீட்டிற்கு வராமல் இருக்கும். மேலே சொன்ன இந்த சில குறிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் கஷ்டத்திற்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல விடிவு காலம் பிறக்க இதுவும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -