உங்கள் வீட்டில் துளசி செடி வைத்துள்ளீர்களா? அப்போது உடனே இவற்றை சரியாக செய்துள்ளீர்களா என்று கவனித்துப் பாருங்கள்

thulasi
- Advertisement -

துளசியின் மருத்துவ குணம் அதிகமாக இருக்கிறது. எனவே இதன் மகத்துவம் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதற்க்காகத்தான் பெருமாள் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்து சமயத்தின் தெய்வீக செடியாகவும், அற்புத மூலிகையாகவும் விளங்குகிறது இந்த துளசி செடி. இந்த செடியின் அற்புத குணங்கள் மற்றும் அதிசயங்களைப் பற்றி மற்றவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்பது கிடையாது. இதன் மகத்துவம் தெரியாதவர்கள் என்று எவருமில்லை. அதேபோல் இதன் மருத்துவத் தன்மையை பயன்படுத்தாதவார்கள் என்று எவரும் இல்லை. அவ்வாறு அற்புத சக்தி மிக்க இந்த துளசி செடியை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வருகின்றனர். அப்படி வளர்க்கப்படும் இந்த செடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும், எந்த இடத்தில் வைக்க வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

துளசி மாடம் வைக்க வேண்டிய இடம்:
சூரிய ஒளி விழுகின்ற இடமாகவும், அந்த இடத்தில் கிழக்கு திசை நோக்கியும் துளசி மாடம் அமைக்க வேண்டும் என்பது சாஸ்திர கூற்று. அதன்படி நமது வீட்டின் தரையை விட தாழ்வான பகுதியில் இந்த துளசி மாடத்தை வைத்துவிடாமல் சற்று உயரமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

துளசி மாடத்தை வழிபடும் முறை:
துளசியை வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் மட்டும் போதாது. அதற்கு தினமும் விளக்கேற்றி, பூஜை செய்து, மூன்று முறை வலம் வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் துளசி செடியை வலம் வரும் பொழுது அதற்கான மந்திரத்தை உச்சரிப்பது சிறந்த பலனைக் கொடுக்கிறது.

துளசிச் செடியை வலம் வரும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்:
“பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லயே
க்ஷீ ரோதமத நோத் புதே
துளசி த்வாம் நமாம்யஹம்”
இந்த மந்திரத்தைச் சொல்லி தினமும் மூன்று முறை துளசிச் செடியை வலம்வர உங்கள் பாவங்கள் அனைத்தும் மறைந்து புண்ணியம் வந்து சேரும்.

- Advertisement -

சுவாமிக்கு துளசி மாலை சூட்டும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
“துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
வரதா பவ சோபனே”
இவ்வாறு இந்த மந்திரத்தை சொல்லி சுவாமிக்கு துளசி மாலை அணிவிக்க வேண்டும். இறைவனுக்கு துளசி மாலை அணிவிப்பது இறைவனை மகிழ்விக்கும். அதிலும் இந்த மந்திரத்தைச் சொல்லும் பொழுது இறைவன் மனம் மகிழ்ந்து உங்கள் வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றுவார்.

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஏகாதேசி மற்றும் மாலை நேரத்தில் துளசி இலைகளைப் பறிப்பதை நிச்சயம் தவிர்த்துவிட வேண்டும். இவ்வாறு செய்வது நமக்கும், நமது குடும்பத்திற்கும் நல்லதல்ல. இவ்வாறு பல விதி முறைகள் நமது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நமது முன்னோர்கள் காரணம் எதுவுமின்றி இவ்வாறான விஷயங்களை சொல்லி வைப்பது கிடையாது. எனவே இவற்றை ஆராயாமல் நமக்கு நல்லது என்று எடுத்துக் கொண்டு, இவற்றை சரியாகபின்பற்றி வந்தால் நிச்சயம் அனைவருக்கும் நல்லதே நடக்கும்.

- Advertisement -