தும்பை கீரை கூட்டு செய்வது எப்படி

thumbai keerai
- Advertisement -

தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். அதிலும் ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு விதமான நோய்களை தீர்க்கக் கூடிய தன்மைகள் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் தும்பை கீரையை வைத்து எப்படி கூட்டு செய்வது என்றும் அதன் மருத்துவம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சாலை ஓரங்களில் பரவலாக காணப்படுவது தான் தும்பை கீரை. இந்த கீரை மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த கீரையாக திகழ்கிறது. கீரை மட்டுமல்லாமல் அந்த பூவிற்கும் பலவிதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. முதலில் இந்த கீரையை செய்வதை பற்றி பார்த்துவிட்டு பிறகு என்னென்ன நோய்கள் சரியாகும் என்று பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு – 100 கிராம்
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 1
  • சின்ன வெங்காயம் – 5
  • பூண்டு – 3 பல்
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • தும்பை கீரை – ஒரு கட்டு அல்லது மூன்று கைப்பிடி அளவு
  • பெருங்காயம் – சிறிது
  • மிளகு சீரகத் தூள் – 1/2 ஸ்பூன்

செய்முறை

பொதுவாக கீரைகளை நாம் சமைக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் மண் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதன் மூலம் அதன் சத்துக்களை பாதுகாக்க முடியும். அலுமினிய பாத்திரம் அல்லது குக்கரில் கீரை சமைப்பதை தவிர்ப்பது நன்மை தரும். பாசிப்பருப்பை நன்றாக சுத்தம் செய்து மண் பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

ஒரு கொதி வந்ததும் அதில் வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு இதில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வேக வேண்டும். அதற்குள் தும்பை கீரையில் இருக்கக்கூடிய இலைகளை தனியாக பிரித்து சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்வோம். முடிந்த அளவிற்கு சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்வோம்.

- Advertisement -

இப்பொழுது பருப்பு நன்றாக வெந்த பிறகு கீரையை அதில் சேர்த்து வேக வைக்க வேண்டும். கீரையை வேக வைக்கும் போது மூடி போட்டு வேக வைக்க கூடாது கீரை நன்றாக வெந்ததும் அதில் தேவையான அளவு உப்பு, மிளகு சீரகத் தூள், இடித்த பூண்டு இவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கீரையை தாளிக்க விரும்புபவர்கள் தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி சிறிது சீரகமும் இரண்டு காய்ந்த மிளகாயும் போட்டு தாளித்து அதில் ஊற்றி விடலாம்.

நீண்ட நாட்களாக சளி தொந்தரவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தும்பை இலை கீரையை சாப்பிடலாம். பசியே இல்லாமல் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கீரையை சாப்பிடுவதன் மூலம் அவர்கள் வயிற்றுக்குள் இருக்கும் பூச்சிகள் அனைத்தும் நீங்கி பசியை தூண்டும்.

- Advertisement -

முடக்குவாதத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த கீரையை உணவாக எடுத்துக் கொள்வது நன்மையை தரும். கல்லீரல் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கீரையை வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயின் தாக்கம் குறையும். இந்த கீரையை சமைத்து உண்பதைப் போல சாராக எடுத்து உபயோகப்படுத்துவதன் மூலம் சரும நோய்களுக்கும் நல்ல தீர்வாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: கற்கண்டு வடை

சாலையோரங்களில் கேட்பாரற்று கிடக்கும் இந்த தும்பை கீரையின் பயன்களை உணர்ந்து அதை பயன்படுத்தி நோய்களின் தாக்கத்திலிருந்து வெளிவருவோம்.

- Advertisement -