துன்பங்களை தூள் தூளாக்கும் துர்க்கை அம்மன் வழிபாடு

durgai valipadu
- Advertisement -

துன்பமில்லாத மனிதர் என்று யாரும் இந்த உலகில் இல்லை. மனிதன் மட்டுமல்ல இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் துன்பம் வந்து கொண்டு தான் இருக்கும். அந்த துன்பத்தில் இருந்து வெளிவருவதற்கு விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் கண்டிப்பான முறையில் தேவை. அதோடு சேர்த்து தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளும் பொழுது அந்த விடா முயற்சி, தன்னம்பிக்கை அனைத்தையும் அந்த தெய்வம் நமக்கு வாரி வழங்குவார். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் துர்க்கை அம்மனை வீட்டிலேயே எந்த முறையில் வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

துன்பங்களை நீக்கக்கூடிய வல்லமை படைத்த தெய்வங்கள் பல இருந்தாலும் அதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகவும் அதிகமான அளவில் பெண்கள் வழிப்படக்கூடிய தெய்வமாகவும் திகழக்கூடியவர்தான் துர்க்கை அம்மன். துன்பங்களை தூள் தூளாக்கும் தெய்வம் என்பதால் தான் அவளுக்கு துர்க்கை என்றே பெயர் வந்தது. அப்படிப்பட்ட துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமையிலும், வெள்ளிக்கிழமையிலும் பெண்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்வார்கள்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்வார்கள். அப்படிப்பட்ட துர்க்கை அம்மனை வீட்டிலேயே எந்த முறையில் வழிபடலாம் என்று பார்ப்போம். இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அன்று செய்வது மிகவும் விஷேசத்திற்குரியது. அதிலும் குறிப்பாக நாளை பௌர்ணமி அன்று வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பதால் இந்த வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நன்மையாக இருக்கும்.

துன்பம் நீங்க இத்தனை வாரங்கள் வழிபாடு மேற்கொள்கிறோம் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்கு செவ்வரளி பூக்களும், தாழம்பூ குங்குமமும் தேவைப்படும். செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் வீட்டில் இருக்கும் அம்மன் படத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். துர்க்கை அம்மன் படமாக இருந்தால் அது மிகவும் விசேஷம்.

- Advertisement -

அதற்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாளத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பக்கத்தில் அகலில் நெய் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு தாம்பாளத்தில் உதிரி செவ்வரளி பூக்களையும், தாழம்பூ குங்குமத்தையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பூவையும் சிறிது குங்குமத்தையும் ஒன்றாக எடுத்து அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே துர்க்கே ரட்சிணி ஸ்வாஹா” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். இந்த மாதிரி 108 முறை மந்திரத்தை கூறி பூ மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மனுக்கு நெய்வேத்தியமாக மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சாதத்தை படைக்க வேண்டும். பூஜை அனைத்தும் முடிந்த பிறகு சாம்பிராணி, கற்பூர தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். இந்த முறையில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கேட்ட வரம் கிடைக்க மார்கழி பௌர்ணமி வழிபாடு

இந்த முறையில் துர்க்கை அம்மனை முழுமனதோடு நாம் பூஜை செய்து வழிபட்டு வர நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -