துன்பங்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாட்டு முறையும் மந்திரமும்

durgai amman mantiram
- Advertisement -

துர்க்கை அம்மன் வழிபாடு என்பது காலம் காலமாக நம்முடைய வழிபாட்டு முறையில் உள்ளது தான். துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே எலுமிச்சை பழ தீபம் தான். இதுவும் பலரும் அரிந்த ஒன்று தான். இந்த தீபம் ஏற்றி வழிபடும் போது நம்முடைய தடைகள் அனைத்தும் தகர்த்தெறியப்படும் என்பது நம்பிக்கை. அந்த தீபத்தை ஏற்றும் பொழுது நாம் சொல்ல வேண்டிய ஒரு மந்திர வார்த்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

துன்பம் தீர துர்க்கை அம்மன் வழிபாடு

இந்த வழிபாடு நாம் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் தான் செய்ய வேண்டும். இந்த தீபம் ஏற்ற செல்லும் முன்பே வீட்டிலே நாம் தீபம் ஏற்றுவதற்கு உரிய எலுமிச்சை பழத்தை வாங்கி கையில் வைத்துக் கொண்டு மனதார வேண்டிய பிறகு தான் ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

- Advertisement -

அத்துடன் எப்பொழுது நாம் இந்த தீப வழிபாட்டிற்காக சென்றாலும் வீட்டிலிருந்து நெய்வேத்தியமாக எலுமிச்சை சாதம் செய்து கொண்டு செல்ல வேண்டும். அதே போல் குறைந்தது ஐந்து பேருக்காவது எலுமிச்சை பழ சாதத்தை தானமாக கொடுக்க வேண்டும். இப்படி தானமாக கொடுக்கும் போது தண்ணீர் பாட்டலுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இது உங்கள் வேண்டுதலை உடனே நிறைவேற்றும்.

அடுத்து இந்த பழத்தை ஆலயத்தில் அரிந்து தீபம் ஏற்றும் போது எந்த முறையில் நாம் செய்ய வேண்டும் எந்த மந்திர வார்த்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பழத்தை முதலில் கையில் எடுத்து நம்முடைய வேண்டுதலை மனதார சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு முதலில் இந்த பழத்தை நறுக்கும் போது ஐம் என்ற வார்த்தையை சொல்லிக் கொண்டு நறுக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு பழத்தின் சாறை கீழே பிழிந்து விடும் போது ஹ்ரீம் என்ற மந்திர வார்த்தையை சொல்ல வேண்டும். பின்பு எண்ணெய் ஊற்றி திரி போடும் போது க்லீம் என்ற வார்த்தையை சொல்ல வேண்டும். அதன் பிறகு தீபம் ஏற்றும் போது சாமுண்டாய விச்சே என்ற வார்த்தையை சொல்ல வேண்டும். இதை செய்த பிறகு சாதத்தை நெய்வேத்தியமாக அம்மனுக்கு படைக்க வேண்டும்.

இந்த வேண்டுதல் முடிந்த பிறகு 9 முறை ஆலயத்தை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும் போது ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாய விட்சே என்ற இந்த மந்திரத்தை 9 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு நீங்கள் கொண்டு சென்றிருக்கும் சாதத்தை தானமாக ஆலயத்தில் வெளியில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். துர்க்கை அம்மனை வழிபடும் போது இந்த முறையில் வழிபட்டு வந்தால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக மார்கழி பௌர்ணமி வழிபாடு

குறிப்பாக திருமண தடை குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதுடன் ராகு கேது தோஷங்கள் நீங்கி வாழ்க்கை வளமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.

- Advertisement -