செல்வம் பெருக மார்கழி பௌர்ணமி வழிபாடு

ninaitha kariyam nadakka
- Advertisement -

பௌர்ணமி என்றாலே சந்திர பகவானை குறிக்கும். சந்திரனை மனோகாரகன் என்று சொல்வார்கள். நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை நிறைவேற்றக் கூடிய ஆற்றலை தரும் சக்தி கொண்டவர் இவர். இன்றைய அற்புதமான நாளில் அவரை நினைத்து நாம் ஏற்றக் கூடிய இந்த தீபம் நம் எண்ணத்தை நிறைவேற்றுவதாய் அமையும். இந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நினைத்த காரியம் நடக்க மார்கழி பௌர்ணமி தீப வழிபாடு

இந்த தீப வழிபாட்டை இன்று மாலை 6:00 மணிக்கு மேல் செய்யுங்கள். இந்த வழிபாட்டிற்கு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி கொஞ்சம் கல் உப்பு, அகல் விளக்கு, நல்லெண்ணெய் பஞ்சுத் திரி, கொஞ்சம் வேப்பம் இலை இவைகளை எல்லாம் ஆறு மணிக்கு முன்பாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் எப்போதும் போல் நீங்கள் முதலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தாம்பாள தட்டிற்க்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் அகலுக்கும் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு வைத்து விடுங்கள். அடுத்து தாம்பாள தட்டு வைக்கும் இடத்தில் ஓம் சக்தி என்ற வார்த்தையை எழுத வேண்டும்.

நாம் வழிபடும் அத்தனை பெண் தெய்வங்களும் சக்தி என்ற இந்த ஒரு வார்த்தைக்குள் அடக்கம். ஓம் என்ற பிரணவ மந்திரத்துடன் இந்த வார்த்தையை சேரும் பொழுது அனைத்து தெய்வங்களில் ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கும். இந்த வார்த்தை எழுதிய பிறகு நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் தாம்பள தட்டை வையுங்கள். அந்தத் தட்டில் பச்சரிசியை கொட்டி பிறகு வேப்பம் இலையை வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு அகலில் கொஞ்சம் கல் உப்பை கொட்டிய பிறகு அதன் மேல் எண்ணெய் ஊற்றிய அகலை வைத்து தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

இந்த தீபம் ஏற்றி பூஜை அறையில் வழிபாடு செய்த பிறகு சந்திர பகவானை பார்த்து உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து தீபத்தை குளிர விடுங்கள். இந்த வழிபாட்டிற்கு பயன்படுத்திய அரிசியை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேப்ப இலையை சாம்பிராணி தூபம் போட பயன்படுத்துங்கள் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

பூஜைக்கு பயன்படுத்திய உப்பை கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். இந்த வழிபாடட்டை ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்பவர்கள் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதுடன் செல்வ செழிப்பு பல மடங்கு உயர்ந்து நல்ல நிலையில் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: மனக்குழப்பங்கள் தீர பரிகாரம்

இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -