கஷ்டங்கள் தீர ராமநவமி

ramar poojai
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் பிறந்த தினம் என ஒரு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய நாளில் அவர்களை அவர்களுக்கு பிடித்த முறையில் வழிபடும் போது நம்முடைய தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த வகையில் நாளைய தினம் ராம நவமி வருகிறது. இந்த ராம நவமியானது ராமரின் அவதார நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்றைய நாளில் ராமரை எளிதாக நம் வீட்டில் எப்படி பூஜை செய்வது என்ன வைத்து பூஜை செய்வது அந்த நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் நாளைய தினத்தில் நாம் கோவிலுக்கு செல்லும் போது ஆலயத்திற்கு தர வேண்டியது என்ன என்பதையும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ராம நவமி எளிமையான வழிபாடு செய்யும் முறை

இந்த வருடம் ராம நவமியானது நாளைய தினம் 17.4.2024 அன்று அனுஷ்டிக்க வேண்டும். இதில் பலருக்கும் சந்தேகம் உண்டு. ஏனெனில் இன்று மாலையில் நவமி திதி துவங்கி விடுகிறது. ஆனாலும் நாளைய சூரிய உதயத்தின் போது ராம நவமி திதி இருப்பதால் நாளைய தினத்தில் தான் இந்த வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த வழிபாடு செய்ய காலை பிரம்ம முகூர்த்தத்திலிருந்து 7.30 மணிக்குள் செய்யலாம். அல்லது ஒன்பது முப்பதிலிருந்து பத்து முப்பது மணிக்குள் செய்யலாம் முடியாதவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள்ளாக செய்து விடுங்கள். இந்த வழிபாட்டிற்கு உங்கள் வீட்டில் ராமர் படம் ஆஞ்சநேயர் படம் போன்ற ஏதாவது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து அதையே ராமராக பாவித்து வணங்கலாம் தவறில்லை.

- Advertisement -

நாளைய தினம் ராமருக்கு மிகவும் உகந்த நெய்வேத்தியமான சர்க்கரை பொங்கல், பாயசம் போன்றவற்றை வைக்கலாம். இத்துடன் நீர்மோர், பானகம் மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. ஏனெனில் ராம அவதாரத்தில் ராமர் எளிமையாக வாழ்ந்தால் இந்த எளிமையான நெய்வேத்தியத்தை நாளை தினம் வைக்க வேண்டும். இத்துடன் துளசி மாலை கட்டாயமாக அணிவிக்க வேண்டும்.

வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டு ராமர் படத்திற்கு முன்பாக அமர்ந்து ஸ்ரீ ராம ஜெயம் என்னும் இந்த வார்த்தையை 308 முறை சொல்லுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் சகல துன்பத்தையும் நீக்கும் என்று சொல்லப்படுகிறது. நாளைய தினத்தில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ராமர் ஆலயம் அல்லது பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கோவிலுக்கு வருபவருக்கு நீர்மோர் தானமாக கொடுப்பது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகள் தீர பைரவர் மந்திரம்

இத்துடன் ராமருக்கு நாளைய தினம் துளசி மாலை வாங்கி சாற்ற வேண்டும். இது நம்முடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை எல்லாம் நீக்குவதோடு செல்வ செழிப்புடன் வாழ வைக்கும் என்று சொல்லப்படுகிறது. நாளைய ராம நவமி தினத்தில் ராமரை எளிமையான முறையில் வழிபாடு செய்யுங்கள். இத்துடன் ஆலயத்திற்கு இந்த எளிமையான பொருட்களை வாங்கி தானம் செய்யும் பொழுது நம்முடைய செல்வ வளம் பெருகும் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் வழிபாடு செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -