துவைக்க துணி நிறைய சேர்ந்து விட்டதா? கை வலிக்க தேய்க்கணும்னு கஷ்டப்படாதீங்க! துணி ஊற வைக்கும் போது இந்த 2 பொருளை சேர்த்து ஊற வையுங்க, 1/2 மணி நேரத்தில் எவ்வளவு துணி இருந்தாலும் துவைத்து விடலாம்!

cloth
- Advertisement -

எல்லா சமயங்களிலும் தினமும் துணி துவைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல! சில சமயங்களில் நம்மால் துணி துவைக்க முடியாமல் போகலாம் அல்லது வேறு ஏதேனும் வேலை காரணமாக துணி சேர்ந்து போக வாய்ப்புகள் உண்டு. இது போல் நிறைய துணி சேர்ந்து விட்டாலே, துவைக்க கஷ்டப்படுவோம். அப்படி அல்லாமல் அரை மணி நேரத்தில் அவ்வளவு துணியையும் துவைப்பது எப்படி? என்பதைத் தான் இந்த பயனுள்ள வீட்டுக் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அதிக துணி சேரும் பொழுது அதை துவைப்பதற்கு நேரமும் அதிகமாக எடுக்கும். எவ்வளவு நேரம் சோப்பு பவுடர் போட்டு ஊற வைத்து இருந்தாலும், அந்த துணிமணிகளை ஒவ்வொன்றாக எடுத்து அழுக்குகளை போக்குவது என்பது சிரமமான காரியமாக இருக்கும்.

- Advertisement -

அதிலும் சிலர் ஊருக்கு போய்விட்டு புது துணிமணிகளை எல்லாம் சேர்த்து வைப்பார்கள். இது போல புது துணிமணிகள் துவைக்கும் போது சாயம் போகும் பிரச்சனையும் வரும். வேலைபாடுள்ள துணிமணிகள், வெள்ளை துணிகள் என்று மொத்தமாக சேர்ந்து துவைப்பதற்கு பெரும் பாடாக போய்விடும். இப்படியான நேரத்தில் கூட கை கொடுக்கக்கூடிய இந்த ரெண்டு பொருள் எப்பொழுதும் வீட்டில் இருப்பது பெரிய பயனாக இருக்கும்.

இன்று பெரும்பாலான கிளீனிங் வேலை மற்றும் சமையலுக்கு தேவைப்படக்கூடிய அந்த ரெண்டு பொருள் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் ஆகும். இவற்றால் உண்டாக கூடிய பயனுள்ள வேலைகள் எவ்வளவோ இருக்கிறது. அதில் இந்த துணி துவைக்கும் வேலையும் ஒன்று. அதிக அளவிற்கு துணி சேர்ந்து விட்டால் துணி துவைக்க ஊற வைப்பதற்கு முன்பு ஒரு பக்கெட்டில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவும், அதே அளவிற்கு சமமாக வினிகரும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வழக்கம் போல சோப்பு பவுடர் அல்லது லிக்விட் எது வேண்டுமானாலும் ரெண்டு மூடி அளவிற்கு ஊற்றி முக்கால் பக்கெட் தண்ணீரை நிரப்பி நுரைக்க எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது சாயம் போகக்கூடிய புது துணிகளை தவிர மற்ற எல்லா துணிகளையும் இதில் சேர்த்து அழுத்துங்கள். ஒரு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதிகம் சாயம் போகக்கூடிய துணிமணிகளை தனியாக ஒரு பக்கெட்டில் இதே போல ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வினிகர் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கும் பொழுது சாயம் போகாது எனினும் அதிக அளவு சாயம் போகக்கூடிய துணிகளை தனியாக துவைப்பது தான் நல்லது.

இதையும் படிக்கலாமே:
தர்பூசணி பழம் இப்படி இருந்தால் கண்ணை மூடிக்கிட்டு வாங்கிடாதீங்க. இந்த தர்பூசணியை சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆபத்து.

அரை மணி நேரம் நன்கு துணிமணிகள் ஊறியதும் தண்ணீரை பார்த்தால் நுரைகள் எல்லாம் போய் தண்ணீரின் நிறமே மாறி இருக்கும். மொத்த அழுக்குகளும் தண்ணீருக்குள் இறங்கி இருக்கும். 90% உங்களுடைய அழுக்குகள் அனைத்தும் இந்த நீரிலேயே நீங்கிவிடும். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக தரையில் வைத்து கும்மி எடுத்தாலே போதும், உங்களுடைய துணிமணிகள் அனைத்தும் பளிச்சு பளிச்சுன்னு ஆகிவிடும். கஷ்டப்பட்டு தேய்த்து பிரஷ் போட்டு துவைக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லா துணிமணிகளையும் இதே போல அரை மணி நேரத்தில் சட்டு சட்டுனு கும்மி எடுத்து அலசி காய போட்டு விடலாம்.

- Advertisement -