வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது, ஒரு துணியில் இருக்கும் சாயம் இன்னொரு துணியில் ஒட்டி பிடிக்காமல் இருக்க 1 ஸ்பூன் இந்த பொடியை சேர்த்தால் போதும்.

cloth4
- Advertisement -

நம்முடைய வீட்டிற்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய ஒரு சில பயனுள்ள வீட்டு குறிப்பு களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக வாஷிங்மெஷினில் துணி துவைப்பவர்களுக்கு ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால், ஒரு துணியில் இருக்கக்கூடிய சாயம் இன்னொரு துணியோடு ஒட்டிக் கொள்ளும். வெள்ளை துணிகளை கலர் துணிகளோடு சேர்த்து துவைக்கவே முடியாது. இந்த பிரச்சனைக்கும் ஒரு எளிமையான தீர்வு இந்த பதிவில் உங்களுக்காக.

குறிப்பு 1:
வீட்டில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் எல்லாம் பாட்டிலில் வாங்கி ஸ்டோர் செய்வோம். சில நாட்களில் அதில் சிக்கு வாடை அடிக்க தொடங்கி விடும். எண்ணெய் பாட்டிலுக்கு உள்ளே ஒரு கட்டி வெள்ளத்தைப் போட்டு வைத்தால், எண்ணெய் நீண்ட நாட்களுக்கு சிக்கு வாடை அடிக்காமல் பிரெஷ் ஆக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
உங்க வீட்டு சமையல் அறையில், கேஸ் பற்றவைக்கும் லைட்டர் பிசுபிசுப்பாக அழுக்காக இருக்குமா. அதை தண்ணீர் ஊற்றி கழுவ முடியாது அல்லவா. பல் தேய்க்கும் பல்பொடி சிறிதளவு எடுத்து அந்த லைட்டர் மேலே தூவி, ஒரு துணியை வைத்து துடைத்தால் ஒரே நிமிடத்தில் லைட்டர் பளிச் பளிச்சென மாறும். பல்பொடி இல்லை என்றால் அதற்கு பதில் பல் தேய்க்கும் பேஸ்ட் பயன்படுத்துங்கள்.

குறிப்பு 3:
உங்க வீட்டு நெயில் கட்டர் மொக்கையாக இருக்குதா. நகத்தை வெட்டாதா. காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்துக்கோங்க. அதில் ஷார்ப்பாக இருக்கக்கூடிய பக்கத்தில், இந்த நைல் கட்டரை வைத்து சாணம் பிடிப்பது போல தேய்க்க வேண்டும். கத்தியை தேய்க்க கூடாது. நைல் கட்டரில், நகம் வெட்டக்கூடிய அந்த பகுதி இருக்கும் அல்லவா, அதை கத்தியில் வைத்து தேய்க்கும் போது, அந்த நைல் கட்டர் சார்பாக மாறிவிடும்.

- Advertisement -

குறிப்பு 4:
வெள்ளிப் பொருளை போட்டு வைத்திருக்கும் டப்பாவில் ஒரு சின்ன கற்பூர துண்டு போட்டு வையுங்கள். வெள்ளி சீக்கிரம் கருத்துப் போகாமல் இருக்கும்.

குறிப்பு 5:
வாஷிங் மெஷினில் எப்போதும் போல துணிகளை போட்டு விடுங்கள். துணிகளை துவைப்பதற்கு லிக்விட் அல்லது பவுடர் உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதனோடு 2 ஸ்பூன் பொடியாக தூள் செய்த படிகார பொடி சேர்க்க வேண்டும். படிகார கல் நாட்டு மருந்து கடைகளில் விற்கும். அதை வாங்கி இடித்து தூள் செய்து, மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் படிகார பவுடர் நமக்கு கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: சட்னி அரைக்கிற நேரத்துல, சூப்பரான இந்த கருப்பு கொண்டை கடலை கிரேவியை செய்துவிடலாம். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஆரோக்கியமான சைட் டிஷ்.

உங்களுடைய துணிகளுக்கு ஏற்ப ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் இந்த படிகாரப் பொடியை வாஷிங்மெஷினில் போடும்போது துணிகளில் இருக்கும் அழுக்கு முழுமையாக நீங்கும். அதே சமயம் ஒரு துணியில் இருக்கும் சாயம் இன்னொரு துணியோடு ஒட்டாமல் இருக்கும். வெள்ளை துணிகளை கூட பயப்படாமல், கலர் துணிகளோடு போட்டு துவைக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -