- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் ஏற்பட சிவ வழிபாடு

துரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் ஏற்பட சிவ வழிபாடு

- Advertisement -

ஒருவர் சீரும் சிறப்புடன் வாழ வேண்டுமென்றால் அவருக்கு துரதிஷ்டம் என்பது கண்டிப்பான முறையில் இருக்கக் கூடாது. அதிர்ஷ்டம் இருக்கிறதோ இல்லையோ துரதிஷ்டம் மட்டும் இருக்கவே கூடாது. நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும் அளவிற்கு நேர்மறை ஆற்றல்கள் இருக்க வேண்டும். துரதிஷ்டம் ஏற்பட்டு விட்டால் அதனால் பல பிரச்சினைகளை நாம் சந்திப்பதோடு. அதோடு மட்டுமல்லாமல் உற்றார் உறவினரின் கடுமையான சொல்லுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். அப்படிப்பட்ட துரதிஷ்டத்தை நம்மிடமிருந்து நீக்குவதற்கு சிவபெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பாக்கியம் ஏற்படும். யார் ஒருவர் தொட்ட காரியம் துலங்காமலோ அல்லது தடைகள் ஏற்பட்டு கொண்டு இருந்தால் அவரை துரதிஷ்டசாலி என்றும் அதிர்ஷ்டம் கெட்டவர் என்றும் கூறுவார்கள். இந்த நிலை மாறுவதற்கு நமக்கு உதவக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் சிவபெருமான்.

- Advertisement -

சிவபெருமானிடம் நாம் பல வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்வோம். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது சில சூட்சுமங்களை நாம் கடைப்பிடிப்பதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய துரதிஷ்டம் நீங்க அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த வழிபாட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு நாம் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது கையில் ஒரு ருத்ராட்சத்தை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

இந்த ருத்ராட்சம் எத்தனை முக ருத்ராட்சமாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த சிவன் கோவிலில் இருக்கக்கூடிய வில்வ மரத்தில் இருந்து ஒரு வில்வ இலையை மட்டும் பறித்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் அச்சகரின் அனுமதியைப் பெற்றுதான் பறிக்க வேண்டும். யாருக்கும் தெரியாமல் வில்வ இலையை பறிக்கக்கூடாது. மரத்திலிருந்து தான் பறிக்க வேண்டும். கடையில் இருந்து வாங்க கூடாது. அவ்வாறு பறித்த இலையில் இந்த ருத்ராட்சத்தை வைத்து நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு சிவபெருமானிடம் சென்று மனம் உருகி உங்களுடைய துரதிஷ்டம் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். உங்களால் இயலும் பட்சத்தில் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமோ, ஆடை தானமோ செய்யலாம்.

வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு இந்த ருத்ராட்சத்தையும் வில்வ இலையையும் அப்படியே எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் இருக்கும் சிவபெருமானின் பாதங்களில் வைத்து விட வேண்டும். இந்த முறையில் நாம் சிவபெருமானை வழிபடும் பொழுது நம்மை துரத்திக் கொண்டிருக்கும் துரதிஷ்டமும் நம்மை விட்டு விலகும். அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதால் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: தெய்வ சக்தி அதிகரிக்க உதவும் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த சிவ வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் துரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.

சற்று முன்