கடுமையான மார்பு சளி, இருமலைப் போக்கும் தூதுவளை ரசத்தை சூப் போல இப்படி செய்து பாருங்கள், அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீங்க!

thuthuvalai-rasam2
- Advertisement -

தூதுவளை ஒரு அற்புத மூலிகை வகையாகும். இதன் இலைகளில் முட்கள் நிறைந்து காணப்படும். சாதாரணமாக எல்லாருடைய வீடுகளிலும் எளிதாக வளரக்கூடிய இந்த மூலிகை இலையை கட்டாயம் அனைவரும் வளர்ப்பது நல்லது. தூதுவளை இலையில் இருக்கும் சத்துக்கள் சளி மற்றும் இருமலை போக்க வல்லது. எப்பேர்பட்ட விடாப்பிடியான மார்பு சளியையும் எளிதாக கரைத்து உடலை விட்டு வெளியேற்றி விடும்.

thuthuvalai

தொடர் இருமல், அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பவர்கள் வாரம் ஒருமுறை தூதுவளை ரசத்தை உணவுடன் சேர்த்து வருவது மிகவும் நல்லது. மேலும் இந்த தூதுவளை ரசம் சாதத்திற்கு மட்டுமல்லாமல் சூப் போல கார்ன் சிப்ஸ் தூவி அப்டியே குடித்து விடலாம். அந்த அளவிற்கு ருசி மிகுந்ததாக இருக்கும். இந்த தூதுவளை ரசத்தை எப்படி செய்வது? என்கிற ரகசியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

தூதுவளை ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சை அளவு, சின்ன வெங்காயம் – ஆறு, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு பல் – 10, வர மிளகாய் – 3, கடுகு – கால் டீஸ்பூன், துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன், பழுத்த தக்காளி – 2, தூதுவளை இலை – 1 கைப்பிடி அளவிற்கு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவிற்கு, பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

thuthuvalai-rasam

தூதுவளை ரசம் செய்முறை விளக்கம்:
முதலில் எலுமிச்சை அளவிற்கு புளியை எடுத்து அதனை உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, வர மிளகாய் ஒன்று, பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதிலேயே நன்கு சுத்தம் செய்து கழுவிய தூதுவளை இலைகளை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஊற வைத்த புளியை நன்கு கரைத்து, கொட்டைகள் சிப்பிகள் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் பழுத்த 2 பெரிய தக்காளி பழங்களை நன்கு கைகளால் பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், அதில் வர மிளகாய் கில்லி சேர்த்து, பெருங்காயத் தூள் தூவி லேசாக வதக்கவும். பின்னர் பொடி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை கொஞ்சமாக சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

thuthuvalai-rasam1

வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் புளி மற்றும் தக்காளி கரைசலை ஊற்றி கொள்ளுங்கள். கலந்து விட்ட பின்னர் அரைத்த மிளகு, சீரக விழுதையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். லேசாக ரசம் கொதித்து வந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி, கறிவேப்பிலை தழைகளை சேர்த்து இறக்க வேண்டியது தான். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இந்த ரசத்தை நீங்களும் இப்படி அடிக்கடி செய்து உங்கள் குடும்பத்தினரின் நலன் காத்திடுங்கள்.

- Advertisement -