கோழையாக இருப்பவர்கள், துணிவும் தைரியமும் பெற, ஹனுமனுக்கு இந்தக் கிழமையில் தீபம் ஏற்றி பாருங்கள். பிறகு பயம் என்ற வார்த்தைக்கு உங்கள் வாழ்க்கையில் இடம் இருக்காது.

hanuman1
- Advertisement -

என்னதான் அறிவாளியாக இருந்தாலும், நிறைய படித்திருந்தாலும், துணிச்சலும் தைரியமும் வாழ்க்கையில் இல்லை என்றால் சில விஷயங்களை நம்மால் சாதிக்க முடியாது. நிறைகுடம் தலும்பாது என்ற பழமொழிக்கு இணங்க, எல்லாம் தெரிந்தவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் எல்லா இடத்திலும் அமைதியாக இருந்து விட்டால் நம்முடைய திறமை வெளிப்படாமலேயே போய்விடும். எந்த இடத்தில் பேச வேண்டும். எந்த இடத்தில் துணிச்சலாக நடந்து கொள்ள வேண்டும். எந்த இடத்தில் தைரியத்தோடு நடந்து கொள்ள வேண்டும், என்ற சூட்சுமங்களை அறிந்து காயை நகர்த்த வேண்டும்.

அப்போதுதான் வாழ்க்கையில் சுலபமாக வெற்றி அடைய முடியும். சில பேர் கோழையாகவே இருப்பார்கள். எல்லா விஷயங்களும் தெரிந்து இருக்கும். ஆனால், வெளிப்படுத்த மனதில் பயம் இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் ஹனுமன் வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், கூடவே சேர்த்து ஒரு சூட்சமமான ஹனுமன் பற்றிய ஆன்மீகம் தகவலையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

மன தைரியம் பெற ஹனுமன் வழிபாடு:
அனுமனுக்கு உரிய கிழமைகள் என்றால் அது செவ்வாய், வியாழன், சனிக்கிழமை இந்த மூன்று கிழமைகளும் அனுமனுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை அகல் விளக்கில் நெய் ஊற்றி, தீபம் ஏற்றினால் சுகபோகமான வாழ்க்கையை பெற முடியும். வீடு, நிலம், வாகனம், நகைகளை வாங்கி சேர்க்க கூடிய யோகம் நமக்கு கிடைக்கும்.

வியாழக்கிழமை மண் அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றினால், மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். கோழையாக இருப்பவர்கள் கூட தைரியமாக மாறுவார்கள். எப்போதும் மனதில் இருக்கும் நடுக்கமும் தடுமாற்றமும் நீங்கிவிடும். தைரியத்தோடும் துணிச்சலோடும் செயல்பட வியாழக்கிழமை வேப்பெண்ணையில் அனுமனுக்கு தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

சனிக்கிழமை மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால், ஆயுள் கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மூன்று விளக்குகளையும் கோவிலுக்கு சென்று ஹனுமன் சன்னிதானம் உள்ள இடத்தில்தான் ஏற்ற வேண்டும். வீட்டில் ஏற்ற கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதோடு சேர்த்து அனுமன் பற்றிய ஒரு அறிய தகவல் உங்களுக்காக இதோ.

ஹனுமன் பிறந்த நட்சத்திரம் மூல நட்சத்திரம். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோருமே அனுமனின் ஆசி பெற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஒரு காரியம் நல்லபடியாக நடக்கவில்லை. இழுபறியாகவே உள்ளது என்றால் மூல நட்சத்திரம் உள்ளவர்களை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். ரொம்ப நாள் இழுபறியாக இருந்த காரியம் கூட சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: திருஷ்டி கழிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன? எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நீங்க இப்படி செய்யுங்கள்!

உதாரணத்திற்கு நீண்ட நாட்களாக கோர்ட்டு கேஸ் வழக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறது. நீண்ட நாட்களாக ஒரு பஞ்சாயத்து, நீண்ட நாட்களாக நடக்க வேண்டிய நல்லது நடக்கவே மாட்டேங்குது, இப்படி தீர்க்க முடியாத சிக்கலை தீர்த்து வைக்க வேண்டும் என்றால் உங்களுடன் மூல நட்சத்திரக்காரர்கள் வந்தாலே போதும். மூல நட்சத்திரக்காரர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அனுமனின் ஆசி பெற்றவர்கள். நல்லது நினைத்தால், நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -