டிபன் சாம்பாரை ஒருமுறை இப்படி வெச்சு பாருங்களேன். திரும்பத் திரும்ப இந்த சாம்பாரை செஞ்சுக்கிட்டே இருப்பீங்க.

sambar
- Advertisement -

பொதுவாக இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள டிபன் சாம்பார் செய்வதாக இருந்தால் பெரும்பாலும் நாம் அதில் காய்கறிகளை சேர்க்க மாட்டோம். சில பேர் முருங்கைக்காயை மட்டும் போட்டு டிபன் சாம்பார் வைப்பார்கள். ஆனால் காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான முறையில் ஒருமுறை இப்படி சாம்பாரை வைத்து பாருங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்ட மாதிரியும் இருக்கும். அதே சமயம் சுவைக்கும் எந்த ஒரு குறையும் இருக்காது. சரி வித்தியாசமான சுலபமான சாம்பார் ரெசிபி தெரிஞ்சுக்க உங்களுக்கு ஆவலாக உள்ளதா. வாங்க பார்க்கலாம்.

முதலில் மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். மீடியம் சைஸ் கேரட் ஒன்றை தோல் சீவி வட்ட வடிவில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 4 லிருந்து 5 கத்தரிக்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டி இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து புளிக்கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

puli1

முதலில் 1 கப் அளவு துவரம் பருப்பை எடுத்து கழுவி குக்கரில் போட்டு கொள்ளுங்கள். துவரம் பருப்புடன் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 3, நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், கத்தரிக்காய், பச்சைமிளகாய் – 1, தோல் உரித்த பூண்டு பல் – 6, தோலுரித்த சின்ன வெங்காயம் 10 லிருந்து 15 பல், சேர்த்து இந்த காய்களும் பருப்பும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, இதோடு சேர்த்து மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், சாம்பார் தூள் – 3 ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து இந்த பொருட்களை எல்லாம் குக்கரில் நன்றாக கலந்துவிட்டு 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்து நான்கிலிருந்து ஐந்து விசில் வைக்க வேண்டும்.

- Advertisement -

விசில் வந்ததும் குக்கரை திறந்து பாருங்கள். குக்கருக்குள் இருக்கும் காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்து குழைந்து இருக்கும். ஒரு மதத்தையோ அல்லது குழி கரண்டி வைத்து இந்த காய்கறிகளை பருப்போடு மசித்து விட்டு கொள்ளுங்கள். இந்த சாம்பாரில் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி, இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

sambar seivadhu epapdi

இறுதியாக இந்த சாம்பாருக்கு சிம்பிளான ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், சேர்த்து தாளித்து இந்த சாம்பாரில் கொட்டி மேலே கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளைத் தூவி அப்படியே இட்லி தோசைக்கு பரிமாறி பாருங்கள். சுலபமாக வைக்கக் கூடிய இந்த சாம்பார் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில் இருக்கும். அதேசமயம் சுவைக்கும் எந்த குறையும் இருக்காது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நாளைக்கு இந்த சாம்பாரை உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -