திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை பார்த்துவிட்டு செல்லுங்கள்

tirupati

இந்தியாவின் மிகப்பெரிய தெய்வீக ஸ்தலம் என்றால் அதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த அளவிற்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்திய அளவில் பிரசித்தமான ஒரு கோவிலாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கொண்டிருக்கிறது.

Perumal

அதன்காரணமாக அனைவரும் கீழ்த் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலையும், திருச்சானூரில் உள்ள அலர்மேலு மங்கையும் தரிசித்து செல்வது வழக்கம். இந்நிலையில் இதற்கு வசதியாக சீனிவாசம் காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ் போன்ற பல தங்கும் விடுதிகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கீழ் திருப்பதி மற்றும் திருச்சானூரில் பக்தர்கள் தங்குவதற்காக புதிதாக 74.7 கோடி ரூபாய் செலவில் பத்மாவதி நிலையம் என்னும் புதிய தங்கும் விடுதி கட்டப்பட்டு பக்தர்கள் எளிமையாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்மாவதி நிலையம் தங்கும்விடுதி சுமார் 4.26 லட்சம் சதுர அடியில் 200 அறைகளுடன் நவீன வசதியோடு கட்டப்பட்டுள்ளது.

Perumal

இவற்றில் 80 அறைகள் குளிர்சாதன வசதி கொண்டதாகவும், 120 அறைகள் சாதாரண வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1800 பேர் இந்த விடுதியில் தங்கும் அளவிற்கு இடவசதி உள்ளது. மொத்தம் 8 அடுக்கு மாடிகளுடன் கூடிய இந்த காம்ப்ளக்சில் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

Perumal

இந்த புதிய தங்கும் விடுதியை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி சுப்பா ரெட்டி சமீபத்தில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இனிமேல் திருப்பதி செல்லும் பக்தர்கள் கீழ் திருப்பதி மற்றும் திருச்சானூர் சுற்றியுள்ள கோவில்கள் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு எளிமையாக சென்றுவர இந்த புதிய தங்கும்விடுதிகள் வழிவகுக்கும் என கூறலாம்.