பார்த்து, பேசி, புரிந்து திருமணம் செய்தாலும் நல்ல துணை அமையவில்லை என்று புலம்புபவர்களை பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கும் அந்த நிலை வராமல் இருக்க என்ன செய்யலாம்?

marraige-couple

பெற்றோர்கள் பார்த்து முடித்து வைத்த திருமண பந்தமோ அல்லது காதல் திருமணமோ! எதுவாக இருந்தாலும் திருமணம் என்பது இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்கள் தலை கீழாக நின்றாலும் இறுதியில் உங்களுக்கென படைக்கபட்டவர்கள் தான், உங்களுக்கு வந்து அமைவார்கள். விருப்பம் இல்லாமல் திருமண பந்தத்தில் இணையும் இருவர் மணமானதும் நாளைடைவில் மனம் மாறி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்றனர். ஆனால் விரும்பி ஏற்கும் அன்பான உறவுகள் சிலர் நாளைடைவில் சதா சண்டை போட்டு இறுதியில் பிரிந்து விடுகின்றனர். இதற்கு காரணம் என்ன? உங்களுக்கென சிறந்த வாழ்க்கை துணை அமைய என்ன செய்யலாம்? என்ற கேள்விகளுக்கு இப்பதிவில் பதில் காணலாம் வாருங்கள்.

sivan-parvathi

எந்த ஒரு விஷயத்திலும் இறைவன் துணையின்றி நீங்கள் வெற்றி பெறுவதில்லை. இதில் தெளிவாக இருப்பது நிச்சயம் அவசியமாக இருக்கும். ஆணவம், செருக்கு, அகம்பாவம் இவற்றால் கிட்டுவது ஒன்றும் இல்லை. ஆனால் இழப்பது உங்கள் வாழ்க்கையை, என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதத்திற்கு இங்கு இடமே இல்லை. உங்களை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்கிறீர்களா? உணர்ந்தால் அதுவே போதும்.

திருமண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன் நீங்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இறைவன் இருப்பதை மறந்து நீங்கள் உங்கள் இஷ்டப்படி வாழ்க்கையை வாழ்ந்தால் உங்களுக்கு நிச்சயம் சிறந்த துணையை பெறுவது என்பது சாத்தியமில்லை. அது நியாயமும் இல்லை. நாம் 6 அறிவுள்ள மனிதன். அதை மறந்து கீழான காரியங்கள் செய்தால் உங்களுக்கு சிறந்த வாழ்க்கை எப்படி அமையும்?

Perumal

கடவுள் இருக்கின்றார்! அவரை நம்பினால் நல்லது நடக்கும் என்று உங்கள் மனதில் வேரூன்றி வையுங்கள். சிலர் கோவில் வரை செல்வார்கள் ஆனால் கோவிலுக்குள் அழைத்தால் வரமாட்டார்கள். அது மிகவும் தவறான விஷயம். ஆலயம் வரை சென்றபின் உள்ளே செல்லாமல் இருப்பது நல்ல பலனை தந்துவிடாது. ஒவ்வொருவரின் குணநலன் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை கொண்டிருக்கும். நீங்கள் சரியென நினைக்கும் விஷயத்தை சிலர் தவறென கூறுவார்கள். உங்கள் கருத்துகளுக்கு ஏற்ற துணை அமைவது வரம். எதிராக கருத்து கூறுபவர்கள் துணையாக அமைந்தால் அது சாபம். நீங்கள் ஆணோ, பெண்ணோ இந்த விஷயங்களை தொடர்ந்து செய்து வாருங்கள். நிச்சயம் உங்கள் மனதிற்கு ஏற்ற துணை அமையும்.

- Advertisement -

1. நீங்கள் ஆணாக இருந்தால், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கட்டாயம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும். பெண்ணாக இருந்தால், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர வேண்டும். இது காலம் காலமாக பின்பற்றி வந்த காலாச்சாரம் தான்.

agal-marraige

2. திருமணம் செய்ய முடியாமல் கஷ்டப்படும் குடும்பத்திற்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்து தர வேண்டும். இலவச திருமணங்களுக்கும் உதவி செய்யலாம்.

3. பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையை மாதம் ஒரு முறையாவது கொடுத்து வர வேண்டும். இதே போல் எருமை மாடுகளுக்கு தண்டுக் கீரை கொடுத்து வர வேண்டும்.

runavimosana-lingam

4. தானாக எழுந்தருளிய சுயம்பு லிங்கம் பிரதிஷ்டை செய்யபட்ட கோவில்களில் அடிக்கடி சென்று பிரகாரத்தை சுற்றி 108 முறை வலம் வர வேண்டும்.

5. தினமும் விநாயகப் பெருமானுக்கு 108 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். காலை, மாலை என இரு வேளையும் போட வேண்டும். இதனால் உடலும் ஆரோக்கியம் பெறும். உள்ளமும் தூய்மை அடையும்.

thoppukaranam

இந்த 5 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உள்ளத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து உங்களின் மனபலம் கூடுவதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள். நல்ல வாழ்க்கை துணை அமைய ஆன்மீக ரீதியாக சொல்லபட்ட சூட்சம வழிகள் இவை. உளவியல் ரீதியாக ஒரு சின்ன அறிவை தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்து கூறும் நபரை நீங்கள் சற்று தள்ளியே வையுங்கள். அதற்காக தவறான கருத்துகளை நீங்கள் கொண்டிருக்க கூடாது. இருவரும் நியாயமான கருத்தை முன் வைத்தாலும், இரண்டும் முரண்பாட்டால் அவர்கள் உங்களுக்கு சரியானவர் இல்லை என்பது தான் உண்மை. நீங்கள் திருமண பந்தத்தில் இணைந்தால் அது வெற்றி அடையாது. அறிவோடும், இறைவனின் துணையோடும் உங்களுக்கான துணையை சரியாக தேர்ந்தெடுங்கள். வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் சம்பாத்தியத்தை பார்த்து உங்களை சுற்றி உள்ளவர்கள், கண்திருஷ்டி வைக்கிறார்களா? அந்த திருஷ்டியை போக்க 5 மிளகு போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to get best life. Best partner in life. Nalla manaivi amaiya. Nalla thunai in Tamil. Nalla kanavan amaiya.