இன்றைய ராசி பலன் – 04-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
உற்சாகமான நாள். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். தேவைப்படும் பணம் கடனாகவாவது கிடைத்துவிடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

மிதுனம்:

midhunam
அலுவலகத்தில் வேலைகள் அடுக்கடுக்காக வந்தாலும் அழகாகச் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மனம் உற்சாகமாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
கொடுத்த கடன் திரும்ப வரும். சிலருக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படக்கூடும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சிம்மம்:

- Advertisement -

simmam
கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பேசும்போது பொறுமை அவசியம். தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கன்னி:

Kanni Rasi
சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் விருந்தினர் வருகை உண்டு. அலுவலகப் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்..

துலாம்:

Thulam Rasi
எதிர்பார்த்த பணம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோயில் விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

virichigam
நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasi
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தேவைப்படும் பணம் கடனாகவாவது கிடைத்துவிடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

மகரம்:

Magaram rasi
புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

கும்பம்:

Kumbam Rasi
ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்:

Meenam Rasi
மனம் உற்சாகமாகக் காணப்படும். உறவினர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகத்தில் வேலைகள் அடுக்கடுக்காக வந்தாலும் அழகாகச் சமாளிப்பீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -