இன்றைய ராசி பலன் – 05-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்: கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். பேச்சில் நிதானம் தேவை. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம்:

midhunam
பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

கடகம்:

Kadagam Rasi
குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். பேச்சில் நிதானம் தேவை. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும்.

சிம்மம்:

- Advertisement -

simmam
எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். கொடுத்த கடன் திரும்ப வரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கன்னி:

Kanni Rasi
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.

துலாம்:

Thulam Rasi
பள்ளிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

விருச்சிகம்:

virichigam
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும்.

தனுசு:

Dhanusu Rasi
எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மகரம்:

Magaram rasi
திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

கும்பம்:

Kumbam Rasi
வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

மீனம்:

Meenam Rasi
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -