இன்றைய ராசி பலன் – 7-1-2020

rasi palan - 7-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கேற்ற செலவு வந்து கொண்டே இருக்கும். உங்களின் கடின முயற்சிக்கு தகுந்த பலன்கள் இல்லம் நாடி வரும். உங்களின் குறிக்கோளில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் இது. தம்பதியர் இடையே மோதல் உண்டாகலாம். விட்டுக் கொடுப்பது நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரக்தியுடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை நிலவலாம். ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாரையும் நம்பாமல் தனித்து செயல்பட வேண்டிய நாள் இது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மிகவும் பரபரப்புடன் காணப்படுவீர்கள். உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை பொறுப்பாக முடிப்பீர்கள். உங்களை நம்பியிருக்கும் சிலர் உங்களால் காயப்பட நேரலாம் அவர்களை ஆறுதல் படுத்துவது உங்களின் கடமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் இல்லம் நாடி வரும். உங்களின் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வதற்கான சூழ்நிலை நிலவும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உங்களின் மகிழ்ச்சியான மனநிலை உங்களை சுற்றியிருக்கும் இடங்களிலும் பரவ செய்யும். சக பணியாளர்களிடம் நட்புணர்வு உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைக்கப் பெறுவார்கள். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாளாக இருக்கும். உங்களுக்கு தெரியாத வேலைகளால் அவமானப்பட நேரலாம் எதையும் ஒன்றுக்கு நான்கு முறை சிந்தித்து அதன் பின் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகலாம். ஒருத்தரை ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. விநாயகரை வழிபடுங்கள்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டப்பட கூடிய நாளாக இருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். பணியிடங்களில் பிரச்சினைகள் உருவாகலாம். வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் விலகி செல்வது நல்லது. ஆரோக்கியத்தை பேணிக்காப்பது தங்களின் கடமையாக கருத வேண்டிய நாள் இது.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து தனவரவு உண்டாகும். குடும்பத்தின் குதூகலம் உண்டாகும். வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும். கணவன் மனைவி உறவில் உறவே விரிசல் விடாமல் இருப்பதற்கு நல்ல சூழ்நிலையில் மனம்விட்டுப் பேசுவது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். அரசு வழி அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். அதனால் முன்னேற்றங்கள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளலாம் நிதிப்பற்றாக்குறை நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இறை வழிபாடுகளில் கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்கு இன்றைய நாள் மந்தமாக காணப்படும். ஏதேனும் சோம்பேறித்தனம் செயல்படுவீர்கள். உங்கள் உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. ஒருவர் மீது இருக்கும் கோபத்தை இன்னொருவர் மீது காட்டி அவர்களிடம் நன்மதிப்பை குறித்து கொள்ள நேரிடலாம். எச்சரிக்கை தேவை. ஈசனை வழிபடுங்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும் வெளியிடங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கை தேவை. மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கை தேவை. யாரிடமும் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படலாம் சிக்கனமாக இருப்பது நல்லது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரயங்கள் உண்டானாலும் சுபகாரியங்களாக இருக்கும். சுப பேச்சுக்கள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. பெற்றோர்களின் உடல்நலனில் அக்கறை தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் இடத்திற்கு தகுந்தார் போல் பலன்கள் கிட்டும்.