இன்றைய ராசி பலன் – 07-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளக்கூடும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம்:

- Advertisement -

Mithunam Rasi
வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகமான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கடகம்:

Kadagam Rasi
முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

சிம்மம்:

- Advertisement -

simmam
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம்.

கன்னி:

Kanni Rasi
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

துலாம்:

Thulam Rasi
சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதிகமாக உழைக்கவேண்டி இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயார் மூலம் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:

virichigam
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

தனுசு:

Dhanusu Rasi
விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். ஆனாலும், அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

Magaram rasi
பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்கவும் நேரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படக்கூடும்.

கும்பம்:

Kumbam Rasi
இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அதே நேரத்தில் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடங்கள் தோன்றக்கூடும்.

மீனம்:

Meenam Rasi
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். அதிகமாக உழைக்கவேண்டி இருக்கும். உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலர் வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -