இன்றைய ராசி பலன் – 09-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்: உற்சாகமான நாள். தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். வாகனப் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பயணங்களும் ஏற்படும். பரணி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நண்பர்களிடம் கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை திறமையாக முடித்துக் கொள்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

மிதுனம்:

midhunam
வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும், சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வெளிநாடுகளில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

சிம்மம்:

simmam
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பயணத்தின்போது கவனம் அவசியம். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

கன்னி:

Kanni Rasi
அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

துலாம்:

Thulam Rasi
மனம் உற்சாகமாகக் காணப்படும். எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். விசாகம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்:

virichigam
உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். உற்சாகமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.. காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasi
பிற்பகலுக்கு மேல் சிலருக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

மகரம்:

Magaram rasi
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கும்பம்:

Magaram rasi
தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்களின் திடீர் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அனுக்கிரகமும் கிடைக்கும்.

மீனம்:

Meenam Rasi
பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படவும் கூடும். மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணை யின் வழியில் பண உதவி கிட்டும். சிறப்புப் பணிகளின் காரணமாக ஓய்வு எடுக்க முடியாமல் அலுவலகத்துக்குச் செல்ல நேரிடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -