இன்றைய ராசி பலன் – 14-08-2020

rasi palan - 14-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் தீர கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மகான்களின் தரிசனம் கிட்டும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்லது நடக்கும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிலும் சிந்தித்து செயல்படக் கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர அன்பு நீடிக்கும். அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கைக்கூடி வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கிடைத்ததை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக அமைய இருக்கிறது.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் வெற்றி அடையும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவு ஓரளவுக்கே இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் நபர்கள் உங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு அமையும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்வுகள் நடைபெறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் உபயோகமாக புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் செலுத்தக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சகோதர சகோதரிகள் வழியே எதிர்பாராத நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றத்தை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாட்கள் எதிர்ப்பார்த்த இழுபறியில் இருந்த விஷயங்கள் தற்போது முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் ஒரு சிலர் செயல்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் இருப்பது நல்லது. தாராள தன வரவு இருப்பதால் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விட முடியும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஆடம்பரப் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவார். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் குறைந்து விருத்தி அடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஈசனை வணங்குவது ஏற்றத்தைத் தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் தொந்தரவுகளை தரும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பாராத இடமாற்றங்கள் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். வெள்ளி தோறும் அம்மன் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -