இன்றைய ராசி பலன் – 19-3-2021

rasi palan - 19-3-21

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் சில தடைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு மேம்பட சந்தர்ப்பங்கள் அமையும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சுயதொழில் செய்பவர்கள் அமைதியுடன் இருப்பது நல்லது. பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா நன்மைகளும் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு தொடர் பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் தெரியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனதில் குழப்பங்கள் நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விசயங்களில் சாதகமான பலன்கள் அமைய இருக்கிறது. துன்பங்கள் தொலைய பைரவர் வழிபாடு செய்வது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் அதிர்ஷ்டம் வரும். திடீர் பணவரவு மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை மாறி தொழில் சூடு பிடிக்கத் தொடங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்காத வகையில் புதிய நட்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு வலுவாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேற குரு பகவானை வழிபடுவது நல்லது.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய தொழிலில் சில நுணுக்கங்களை கற்றுத் தேர்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பு பிறக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி பெற முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் தனவரவு உங்களுடைய பொருளாதார தேவைகளை எளிதாக பூர்த்தி செய்துவிடும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்ப்பதன் மூலம் மன அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அமோகமாக வெற்றி கிடைக்கும். நண்பர்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கடமைகள் மீது உங்களுக்கு அக்கறை அதிகரித்து காணப்படும். நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொள்ளும் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வகையில் பதவி உயர்வு கிடைக்கும் யோகமுண்டு. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் சில வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய விடா முயற்சிக்கும் உரிய பலன்களை காணும் நேரம் இது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நட்பு வட்டம் விரியும். கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கல்கள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடு செய்வதன் மூலம் மன அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே பரஸ்பர அன்னோன்யம் அதிகரிக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகள் காணலாம். வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் காணும் வகையில் அமையும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அம்மன் வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் சுப காரியங்கள் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பது நல்லது. தேவையில்லாத பழிகளை சுமப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது தொழிலுக்கு ஏற்றம் தரும் வகையில் அமையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி காணும் யோகமும் உண்டு எனும் எச்சரிக்கை தேவை. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்கள் சூழ்ச்சி முறியடிக்கப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே புதிய புரிதலை உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆலோசனை செய்து கொள்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. மனதிற்கு பிடித்தவர்களை மூலம் தேவையில்லாத மனக்கசப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகளின் ஒற்றுமை ஓங்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்