இன்றைய ராசி பலன் – 2-5-2020

rasi palan - 2-5-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியை தரும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அவரால் மனமகிழ்ச்சி ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் மன நிம்மதி நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை சமமாக இருந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு தொல்லைகள் கொடுக்க வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு அதிகமான அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கும் அவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். உங்கள் வேலையில் நிர்வாகம் நம்பிக்கை வைக்கும். தொழில் முயற்சி வெற்றியடையும். புதிய தொழில் வாய்ப்புகள் மகிழ்ச்சியை தரும். புதிய படத்தில் இருப்பவர் களுக்கு மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் குடும்பம் அமைதியாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது மற்றும் உத்தியோக உயர்வு உத்தியோக மாற்றம் போன்றவற்றில் சற்று காலதாமதமாகும் வாய்ப்புகள் உண்டு. தவிர்க்க முடியாத செலவினங்கள் ஆல் கையில் உள்ள இருப்பு குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சிறுசிறு கலப்புகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது மூத்தவர்களுக்கு உடல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும். ஒருசில பிரயாணங்கள் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும். அதிகாலை உங்களுக்கு நல்ல செய்தி வரும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக்கூடியநாளாக அமையும். புதிய தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யப்படும் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல முடிவுகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கவும் விற்கவும் முயற்சி செய்வீர்கள்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச்சிறந்த நல்ல நாளாக அமையும். பூர்வீக தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். பொருளாதாரத்தில் பெரிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தாமதப் படுத்த பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாக அமையும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பீர்கள். பெண்களுக்கு மிகச் சிறந்த நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். தாங்கள் ஈடுபட்டிருக்கும் ஒருவேளை இருந்து மற்றொரு வேலைக்கு இடம் மாறுவதற்கான முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குடும்பத்திலுள்ள மூத்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நாளாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். புதிய நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களை ஆரம்பிக்கும் நல்ல நாளாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். கல்யாணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நிதி பற்றாக்குறையில் இருந்தாலும் அவைகள் நிவர்த்தி செய்யப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமாக இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது மிகவும் நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் தொழில் முன்னேற்றமும் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல நிலைமையை அடைவார்கள். குழந்தை பாக்கியம் போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். புதிய தொழிலில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் வருமானத்தையும் கூடுதலாகவே பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாளாக அமையும். கடந்த இரு நாட்களாக தாமதப்படுத்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு என்பதால் தைரியமாக பிரயாணத்தை மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்பட கூடும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு முன்னேற்றமான நாளாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மூத்தவர்கள் உடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான சூழ்நிலையை காண்பார்கள். கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க கூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள். ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது மிகவும் நல்லது. நீண்ட நாட்களாக தாமதப் படுத்த பட்டு வந்த பல காரியங்களை குடும்பத்திற்காக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு சந்தோஷமான நிகழ்வுகள் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -