இன்றைய ராசி பலன் – 20-12-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
இன்றைய தினத்தில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். திடீர் பணவரவு ஏற்படலாம் அதனால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தம்பதியர்களுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். உங்களின் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும் நாள் இன்று. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:
இன்று நிதானமாக இருக்க வேண்டிய நாள். தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். எனவே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவுகள் ஏற்படலாம். தனவரவு திருப்திகரமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. உங்களுக்கு நீங்களே ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டும். தம்பதியர்களுக்கு இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
இன்று உங்களுக்கு ஓய்வின்றி வேலை இருந்துகொண்டே இருக்கும். எதிலும் கவனம் தேவை. நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் முன்னேற்றம் அடைய முடியும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்வது நலம் தரும்.

கடகம்:
இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் நாடி வர இருக்கிறது. அதனை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களது முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தம்பதியருக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும். லட்சுமி தேவியை வழிபடுங்கள் சிறப்பான நாளாக அமையும்.

- Advertisement -

சிம்மம்:
இன்றைய தினம் உங்களுக்கு பதட்டத்துடன் இருக்கும் நாளாக இருக்கும். எந்த செயலையும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செய்வது நல்லது. அடுத்தவர்களின் பணிச்சுமையும் நீங்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படலாம். கடன் தொல்லை இருக்கும் ஆனால் அதை சமாளிப்பதற்கு உரிய மன தைரியம் உங்களிடம் காணப்படும். நரசிம்மரை வழிபடுங்கள்.

கன்னி:
இன்றைய தினம் உங்களுக்கு அலைச்சல் தரும் நாளாக இருக்கும். வெளியில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மிதவேகம் மிக நன்று என்பதை உணர்ந்து செயல்படுங்கள். ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தேடி தரும். தம்பதியருக்கிடையே பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
இன்றைய தினம் உங்களுடைய பொறுப்பு என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தும் நாளாக அமையும். சிக்கனமாக இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். ஓய்வின்றி வேலை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். தியானம் செய்ய பழகுங்கள்.

விருச்சிகம்:
இந்த நாள் உங்களுக்கு சிறப்பான முடிவுகளை எடுக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். நல்ல இனிமையான நாளாக அமையும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் – மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒற்றுமை பலப்படும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

தனுசு:
இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். தேவையான இடத்திலிருந்து தேவையான பணம் கைக்கு வந்து சேரும். சுப விரயங்கள் செய்வதற்கான நிலை உள்ளது. விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். உத்யோகத்தில் நண்பர்களின் ஆதரவு கிட்டும். புதிய யுக்திகள் கையாண்டால் வெற்றி காணலாம்.

மகரம்:
இந்த நாள் உங்களுக்கு மன உறுதியை தரும் நாளாக இருக்கும். எந்த முடிவையும் இந்த நாளில் எடுக்காமல் இருப்பது நல்லது. எதையும் நேர்மறையாக சிந்தியுங்கள். உங்களது இரக்க குணம் உங்களை பிரச்சனைகளில் இருந்து காக்கும். விநாயகரை வழிபடுங்கள்.

கும்பம்:
இன்றைய நாள் நீங்கள் அதிக பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். எவரிடமும் வாயை கொடுத்து மாட்டி கொள்ளாதீர்கள். முடிந்தால் மௌன விரதம் மேற்கொள்ளுங்கள். பைரவரை வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கி இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மீனம்:
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல அரோக்கியமான நாளாக இருக்கும். ஓய்வின்றி வேலை பார்த்த உங்களுக்கு சற்று நிம்மதி அளிக்க கூடிய வகையில் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தம்பதியருக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

- Advertisement -