- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 21 அக்டோபர் 2025

இன்றைய ராசிபலன் – 21 அக்டோபர் 2025

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று எதிர்பார்ப்பு குறைவாக இருக்க வேண்டும். வேலையில் அதிக கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியமாக கையில் எடுக்கக் கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். வியாபாரத்தில் முதலீட்டின் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிதானம் தேவை. அவசரம் வேண்டாம். புது முயற்சிகளை துவங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது மனிதர்களை முழுசாக நம்பாதீங்க. உங்களுடைய பர்சனல் விஷயங்களை யாரிடமும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். இன்று இறைவழிபாடு செய்துவிட்டு உங்களுடைய வேலையை துவங்குவது நல்லது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தேவையற்ற விஷயங்கள் உங்களை விட்டு நீங்கும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். சந்தோஷம் பிறக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கப் போகிறது. தெரிந்தவர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து நடந்துக்கோங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. நிறைய ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உணவு பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபகரமான நாளாக இருக்கும். புது முதலீடுகளை செய்யலாம். புது வேலைகளை துவங்கலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். கடன் சுமை தீரும். நிதிநிலைமை மேலோங்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். உற்சாகம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். விட்ட பெயரை திரும்பவும் பிடிப்பீங்க. கௌரவம் கூடும். கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் டென்ஷன் ஆன நாளாக இருக்கும். நாலு பேரு உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அனாவசியமாக வாக்குவாதம் செய்யக்கூடிய வாய்ப்புகளும் வரும். கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் வரும் தொந்தரவை தவிர்க்க சில தந்திர வேலைகளை கையாளுங்கள். தவறு இல்லை.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உற்சாகம் பிறக்கும். நல்லது நடக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கவனம் தேவை.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். வேலைகளை சரிவர செய்ய முடியாத சூழ்நிலை உண்டாகும். புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். இறைவழிபாட்டில் மட்டும் இன்று கவனம் செலுத்தினால் போதும். வீட்டில் இருக்கும் பெண்கள் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை என்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய நீண்ட நாள் கனவு நினைவாகும். வாரா கடன் வசூல் ஆகும். சில பேருக்கு தங்க நகை வாங்கக்கூட யோகம் இருக்கிறது. இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்துங்கள். பேராசை வேண்டாம். எவ்வளவு நல்லது நடந்தாலும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். திறமையாக செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணையோடு நல்ல நட்புறவு உண்டாக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். மன நிம்மதி கிடைக்கும். கூடுமானவரை செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

சற்று முன்