இன்றைய ராசி பலன் – 21-12-2019

Rasi palan 21-12-2019
- Advertisement -

மேஷம்:
இன்றைய தினம் உங்களுக்கு உங்களது திறமையை வெளிக்காட்டும் ஒரு நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களின் சக பணியாளர்கள் உங்களை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது ஒரு நல்ல நாளாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் பரஸ்பர அன்பு நீடித்திருக்கும்.

ரிஷபம்:
இன்றைய தினம் நீங்கள் யாரிடம் பேசினாலும் கவனமாக பேச வேண்டும். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள் இது. கணவன்-மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணியிடங்களில் செய்யும் வேலையில் முழு கவனத்துடன் செயலாற்ற வேண்டிய நாள் இன்று.

- Advertisement -

மிதுனம்:
இன்றைய தினம் நீங்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரலாம். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருப்பது இன்றைய தினம் சிறப்பாக அமைய வழிவகுக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் நீடித்திருக்கும். குழந்தைகளின் படிப்பில் அக்கறை கொள்ள வேண்டிய நாள் இது. விநாயகரை வழிபடுதல் நல்லது.

கடகம்:
இன்றைய தினம் நீங்கள் எதை செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களின் சிக்கனம் உங்களை அதில் இருந்து காப்பாற்றும். சரியான திட்டமிடலுடன் உங்கள் அறிவை பயன்படுத்தி நீங்கள் செய்த காரியத்தினால் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்:
இன்றைய நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். தம்பதியருக்கிடையே ஒற்றுமை பலப்படும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் ஒரு நல்ல நாளாக இருக்கும். உத்தியோக இடத்தில் சிறிது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மௌனமாக இருப்பது நல்லது.

கன்னி:
இன்றைய தினம் உங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படும். சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பம் செய்வதற்கென்றே சில முயற்சிகளை சிலர் செய்யலாம். அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை செய்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

- Advertisement -

துலாம்:
இன்று உங்களின் உழைப்பை எல்லோரும் புரிந்து கொள்ளும் ஒரு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு கைமேல் பலன் கிடைக்கும். உங்களின் மதிப்பை உங்கள் குடும்பத்தார் உணர்ந்து நடந்து கொள்வார்கள். வியாபார விருத்திக்கு அம்பிகையை வழிபடுங்கள். உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.

விருச்சிகம்:
இன்று உங்களுக்கு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கும் படி சில சங்கடங்கள் உருவாகலாம். உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கட்டாயம் கிடைக்கும். எந்த முக்கிய முடிவுகளையும் இன்றைய தினம் நீங்கள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்ப பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

தனுசு:
இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய இடத்தில் இருந்து வரவேண்டிய வசூல் வந்து சேரும். உங்களின் முயற்சிகளுக்கு முன்னேற்றப் பாதை கண்களுக்கு புலப்படும். இன்றைய நாள் சிறப்பாக அமைய பைரவரை வழிபடுங்கள். உங்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்:
இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும். உங்கள் பணிச்சுமையை சிறிது இறக்கி வைத்துவிட்டு வெளியில் எங்கேனும் சென்று வரலாம். மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய ஒரு நல்ல நாளாக இன்று இருக்கும். எதிர்பாராத நபரால் எதிர்பாராத நற்செய்தி வந்து உங்களை குதூகலப்படுத்தும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்:
இன்று நீங்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நாள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது. எந்த பிரச்சினையும் மேலோட்டமாக நினைக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வார்த்தையில் இனிமையை சேர்த்து இந்த நாளை சிறப்பாக அமைய விஷ்ணுவை வழிபடுங்கள். நல்லதே நடக்கும்.

மீனம்:
இன்றைய தினம் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வந்து சேராததால் மன இறுக்கத்திற்கு ஆளாவீர்கள். எப்போதும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது தான் மனநிம்மதிக்கு நல்ல வழி. பணியிடமாற்றம் நீங்கள் விரும்பியபடி அமைவதற்கான சாத்தியகூறுகள் இருக்கின்றது. கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

- Advertisement -