இன்றைய ராசி பலன் – 22-5-2020

rasi palan - 22-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முக்கிய முடிவுகள் அனைத்திலும் தடைகள் ஏற்படக்கூடும்.உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அவர்களிடம் பொறுமையாக பேசுவது அவசியம். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் தெய்வ அனுகூலம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் தேவையான பணம் கிடைக்கும். சகோதர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் வந்து நீங்கும். கொடுத்த கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளாததால் வீண் அலைச்சல்கள் ஏற்படகூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பது உங்களின் ஆலோசனை பெறுவார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வெளியே செல்லும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது அலட்சியம் வேண்டாம். நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் நல்லமுறையில் நிறைவேறும். வியாபாரத்தில் புது முயற்சியால் நஷ்டம் ஏற்படும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் தேவையான பணம் வந்து சேர்ந்தாலும் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்து செல்வது அவசியம். பிள்ளைகளின் பிடிவாதத்தால் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் பட்டாளம் சமாளித்து விடுவீர்கள்.எதிர்பார்த்த இடத்தில் தேவையான பணம் கையில் வருவதன் மூலம் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வியாபாரிகளால் மகிழ்ச்சி உண்டாகும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் உள்ளது. தொழில் தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆதரவே கிடைக்கும். சகோதரர்களால் செலவுகள் அதிகரித்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிவதால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க கூடும். கொடுத்த பழைய கடன் திரும்பி கிடைக்கக்கூடும். எதிர்பார்த்த இடத்தில் பணம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருமணம் தடை நீங்கி நல்ல வரன் கைகூடும். வியாபாரத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபம் கூடுதலாக இருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். தந்தையிடம் பணம் உதவி கிடைக்க கூடும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் முன்னுரிமை பெறுவீர்கள். சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். பல நாள் காத்திருந்த அரசாங்க உத்தியோகம் கைகூடி வரும். உத்யோகத்தில் சில அலைச்சல்கள் ஏற்படக்கூடும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் செயலால் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை புரிந்துகொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும். நண்பர்களை சந்திக்க நிகழும். உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் அவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் செய்யும் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களால் வீண் செலவும் அலைச்சலும் ஏற்படுவதால் மனதை சஞ்சலப் படுத்தும்.வியாபாரத்தில் பணியாளர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதால் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பணம் கையில் கிடைத்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க உங்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவார்கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மனைவியால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதால் லாபம் அதிகரிக்கக்கூடும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள். புதிய முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்கள் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் லாபம் அதிகரிக்க கூடும். சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.