இன்றைய ராசி பலன் – 23-6-2020

rasi palan - 23-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க போகிறீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் உங்கள் முயற்சியால் மேலும் மேலும் உயர்வீர்கள். சகோதரர்களின் அன்பும் அக்கறையும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். மனைவி வழியே நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கும். நீங்கள் எதை செய்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும் என நம்புவார்கள். அரசின் பணிகள் அனைத்தும் நன்முறையில் முடிவடையும். ஒரு செயலை செய்வதற்கு முன்பு பல முறை யோசித்து செய்வது மிகவும் நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தள்ளிப்போன அனைத்து வேலைகளும் சுலபமாக முடிவடையும். எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவது தவறு தவிர்க்கவும். நீண்ட நாளாக வராத கடன் தொகை வந்து சேரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நன்முறையில் முடிவுக்கு வரும். நீண்ட நாளாக பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள். உங்கள் வியாபாரத்தில் சக தொழிலாளர்களிடம் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. குடும்பத்தில் அக்கறையுடன் இருப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று விஷயங்களை செய்வதால் அலைச்சல்கள் ஏற்படும். சிறிது மன குழப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுடைய தொழிலின் ரகசியங்களை பகிர்ந்து கொள்வது தவிர்க்கவும். நீங்கள் யாரையும் நம்பி பணம் கொடுப்பது நல்லது அல்ல. கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்வீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு செயலை ஆரம்பித்து விட்டால் அதனை முடிக்காமல் விட மாட்டீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. பேச்சில் நிதானம் தேவை. நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்கள் குடும்பத்திற்கு மிகவும் நல்லது. எந்த ஒரு காரியத்தை செய்தாலும் துணிச்சலுடன் செய்வீர்கள். பண வரவு உண்டாகும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்களாக இருப்பீர்கள். பெற்றோரை மதித்து நடப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் ஒரு புதிய அனுபவம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. நண்பர்களால் பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்டவர்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வெகுநாளாக தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் நல்லமுறையில் முடிவடையும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் அதனை எளிதில் சமாளிப்பீர்கள். உங்களுக்கு மேலதிகாரிகளின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். அதிர்ஷ்டம் உண்டாகும் நல்ல நாளாக அமைகிறது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய கூடிய நாளாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் யோகம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும். வீண் விவாதங்கள் தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிக்கும் திறமை. பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நன்முறையில் முடிவடையும். பெரியோர்களை ஆலோசித்து முடிவெடுப்பது மிகவும் நல்லது. எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் கடவுளை பிரார்த்தனை செய்து தொடங்குங்கள். உங்களின் திறமையால் வெற்றிகள் காண்பீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும் உங்கள் வீட்டில் நண்பர்கள் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் திறமை கொண்டவர். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும் இன்று உங்களுக்கு திடீர் யோகம் உண்டாகும். பெற்றோர்களின் ஆசீர்வாதத்தை பெறுவது மிகவும் நல்லது. தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் அனுசரித்துச் செல்வார்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த விஷயம் நல்ல முறையில் நடந்து முடியும். குடும்பத்தில் அனுசரணையாக இருப்பீர்கள். பிறருக்கு உதவி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.