இன்றைய ராசி பலன் – 24-6-2020

rasi palan - 24-6-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கிறது. சில காரியங்கள் இழுபறியாக இருக்கும். உங்களுக்கு பணம் தாமதமாக கிடைக்கக்கூடும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று நீங்கள் எந்தவித முக்கிய முடிவுகள் எடுப்பது தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையாக அமையும். வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கலாம். பணம் வரவு அதிகரிக்கும் குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தைவழி உறவினர்களால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும். நீங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. உங்கள் சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். நீங்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் ஜெயம் உண்டாகும். உங்கள் தொழில் அமோகமாக நடைபெறும். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இன்று எதிர் பாராத செலவுகள் ஏற்படும். நண்பர்களுக்கு பணம் உதவி கொடுக்க வேண்டியிருக்கும். தந்தையிடம் மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரம் சுமாராக தான் இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுமூகமாக முடியும். வியாபாரத்துக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணத்தை செலவு செய்வதில் கவனம் தேவை. நீங்கள் இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். உங்கள் தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். காதல் போன்ற விவகாரங்களில் ஈடுபடவேண்டாம். வார்த்தையில் நிதானம் தேவை.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை எளிதாக சமாளித்து விடுவீர்கள். தாயின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று உங்கள் வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த செயல் செய்தாலும் உங்களுக்கு அதில் அலைச்சல்கள் ஏற்படும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சின்ன சின்ன தடைகள் ஏற்பட்டு நீங்கும். இன்று நீங்கள் எந்தவித முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலை புரியும் இடத்தில் சக பணியாளர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லது. நீங்கள் மணத்துணிச்சல் அதிகம் கொண்டவர்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஒருவழியாக அனுகூலமாக முடிவடையும். எந்தவித ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவதை தவிர்க்கவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த வித விஷயம் தொடங்கினாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து நடப்பது நல்லது. வியாபாரத்தில் சக தொழிலாளர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். நீங்கள் தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றியை தரும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கை துணையால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இன்று விற்பனையும் லாபமும் அதிகப்படியாக எதிர்பார்க்கலாம். தாய்வழி உறவினர்களால் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இன்று எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சகோதரர்கள் நீங்கள் கேட்கும் உதவியையும் மறுக்காமல் செய்வார்கள். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். நீண்ட நாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும். தாயின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. தொழிலாளர்களின் தேவையை போட்டி செய்வதன் மூலம் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதனை எளிதாக சமாளித்து விடுவீர்கள். நண்பர்களிடம் எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம். பொதுவாக யாரையும் நம்ப வேண்டாம். நீங்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் குணம் கொண்டவர்கள். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நிம்மதி ஏற்படும். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செய்வது உங்களுக்கு மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -